உள்ளடக்கத்துக்குச் செல்

அரண்மனை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரண்மனை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புடி. தினேஷ் கார்த்திக்
திரைக்கதைசுந்தர் சி.
இசைபரத்வாஜ்
கார்த்திக் ராஜா (பின்னணி இசை)
நடிப்புசுந்தர் சி.
வினய்
ஹன்சிகா
ஆண்ட்ரியா
லட்சுமி ராய்
சந்தானம்
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புஎன். பி. ஸ்ரீகாந்த்
கலையகம்விசன் ஐ மீடியாஸ்
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
ரெட் ஜெயண்ட் மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 19, 2014
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுதமிழ்நாடு
இந்தியா
மொழிதமிழ்

அரண்மனை (ஒலிப்பு) 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நகைச்சுவை திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சுந்தர் சி. இயக்க, சுந்தர் சி., வினய், ஹன்சிகா மோட்வானி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[1][2][3]

கதைச்சுருக்கம்

[தொகு]

ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.

அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் லட்சுமி ராய் ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.

இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர் சி. அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக ஆண்ட்ரியாவின் உடலில் புகுந்திருக்கிறது? பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை நகைச்சுவை கலந்த திகிலுடன் சொல்லியுள்ளார் இயக்குநர்.

நடிகர்கள்

[தொகு]

நடிகர்களின் பங்களிப்பு

[தொகு]
  • சுந்தர் சி. அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்பான அண்ணனாக நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
  • வினய், சுந்தர் சி. என இரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும், நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் ஆண்ட்ரியா படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை.
  • லட்சுமி ராய் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ஹன்சிகா மோட்வானி.
  • சந்தானத்தின் நகைச்சுவை ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. மனோபாலா, கோவை சரளா, நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ஒலிப்பதிவு

[தொகு]

இப்படத்தின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையை அமைத்துள்ளார்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 கத்தி பார்வைக்காரி கார்த்திக், சுர்முகஹி
2 பீச்சே பீச்சே எம். எம். மானசி, சுர்முகஹி, மோனிஷா
3 பெட்ரோமாக்ஸ் லைட் வேல்முருகன், ஹரிஹரசுதன்
4 சொன்னது ஹரிணி
5 உன்னையே எண்ணியே ஆனந்து, முகேஷ், கார்த்திகேயன்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sundar C's 'Aranmanai' first look poster revealed!". Sify. Archived from the original on 13 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 September 2015.
  2. "Sundar C to appear in court on Monday for 'Aranmanai 2' case". IndiaGlitz. 30 January 2016. Archived from the original on 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  3. "Hansika confirms Sundar C's 'Aranmanai'!". Sify. Archived from the original on 12 September 2013. பார்க்கப்பட்ட நாள் 17 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரண்மனை_(திரைப்படம்)&oldid=4116227" இலிருந்து மீள்விக்கப்பட்டது