சின்னா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னா
இயக்கம்சுந்தர். சி
தயாரிப்புஸ்ரீநிவாசா ராஜா
கதைசுந்தர். சி
திரைக்கதைசுந்தர். சி
இசைடி.இமான்
நடிப்புஐஜூன், சிநேகா, விஜயகுமார், விக்ரமாதித்யா
ஒளிப்பதிவுபிரசாத் முரேல்லா
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
கலையகம்ஸ்ரீஸ்ரீ சித்ரா
வெளியீடு15 சூலை 2005 (2005-07-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுதமிழ்
மொழிதமிழ்

சின்னா (Chinna) 2005 இல் இந்தியாவில் வெளியான அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதனை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது பின்னர் தெலுங்கில் "கொடி" என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டதுடன், ஒடிசா மொழியில் "க்ரிமினல்" என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டது.[1]

கதை[தொகு]

காயத்ரியை (ஸ்நேகா) ஏதோவொரு நினைவில் மூழ்கி இருக்கும் போது அவள் அறியாமலேயே அவளின் விருப்பமின்றி ஒரு நீர்ப்பாசனப் பொறியியலாளர் (விக்ரமாதித்யா) அவளது கழுத்தில் தாலி கட்டி அவளைத் திருமணம் செய்வதிலிருந்து படம் துவங்குகிறது. திருமணம் ஆன கையோடு காயத்ரி அவளது கணவருடன் ஊட்டிக்கு அழைத்து வரப்படுகிறாள். அங்கு முதலிரவில் அவள் அவளது கணவருடன் தாம்பத்திய வாழ்க்கையை துவங்க விருப்பமின்றி தனியே உறங்குகிறாள். அப்போது அவளின் கடந்தகால நினைவுகள் ஓடுகின்றன. அவர் பவளப் பாறைகள் மற்றும் ஏனைய கடல் சூழல் அமைப்புக்கள் சம்பந்தமாக படிப்பதற்கு இராமேஸ்வரம் செல்கிறார். அங்கு அவருடைய மாமனார் வினுசக்ரவர்த்தி மீனவ தொழில் செய்து வருகிறார்.

அங்கு காயத்ரி சின்னா (அர்ஜுன்) மற்றும் அவரது உதவியாளர்களான மன்சூர் அலி கான் உள்ளிட்டவர்களை சந்திக்கின்றனர். இவர்கள் உள்ளூரில் வன்செயல் புரியும் குழு ஒன்றுக்கு வேலை செய்பவர்களாவர். காயத்ரி சின்னாவை உள்ளூர் எஸ்.பி.(விஜயகுமார்) இடம் சிக்க வைக்க எத்தனிக்க, அவரது மாமா தடுத்து விடுகிறார்.

கடல் பற்றி அறிய காயத்ரியின் மாமா அவரை சின்னாவிடம் அனுப்பி வைக்கிறார். சில நாட்களில் இருவரும் காதல் வயப்படுகின்றனர். ஆனால், காயத்ரியின் பெற்றோர் அவரை ஒரு நீர்ப்பாசன பொறியியலாளருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பகுதியில் சின்னா, காயத்ரியை அடைந்து கொள்வதற்காக பலரை கொலை செய்கிறார். இறுதியில் காயத்ரியுடன் இணைந்தாரா என்பது மீதிக்கதை. .[2]

கதாபாத்திரங்கள்[தொகு]

  • அர்ஜுன் - சின்னா
  • ஸ்நேகா - காயத்ரி
  • ஸ்ரீ குமார் - சூசாய்
  • விஜயகுமார் - காயத்ரியின் மாமனார் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி
  • விக்ரமதித்யா - காயத்ரியின் கணவர்
  • லிவிங்ஸ்டன் - பொலீஸ் அதிகாரி
  • மன்சூர் அலி கான் - சின்னாவின் நண்பர்
  • பொன்னம்பலம் - சின்னாவின் நண்பர்
  • வினுச்சக்கரவர்த்தி - காயத்ரியின் மாமனார்
  • ஜெயப்பிரகாஷ் ரெட்டி - சின்னாவின் முன்னாள் முதலாளி
  • மணிவண்ணன்
  • எம்.எஸ்.பாஸ்கர்
  • ரியாஸ் கான்
  • பேஸன்ட் ரவி [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.youtube.com/watch?v=vR7oLozH2ac
  2. https://spicyonion.com/tamil/movie/chinna/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னா_(திரைப்படம்)&oldid=3586969" இருந்து மீள்விக்கப்பட்டது