எம். எசு. பாசுகர்
எம். எஸ். பாஸ்கர் | |
|---|---|
தர்மதுரையில் பாஸ்கர் | |
| பிறப்பு | முத்துப்பேட்டை சோமையா பாஸ்கர் 13 செப்டம்பர் 1957 காடம்பாடி, மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1987– நடப்பு |
| பெற்றோர் | தந்தை : சோமையா தேவர் தாயார் : சத்யபாமா |
| வாழ்க்கைத் துணை | சீலா |
| பிள்ளைகள் | 2 |
முத்துப்பேட்டை சோமையா தேவர் பாசுகர் (M. S. Bhaskar) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவர் 1987-ஆம் ஆண்டு கதாசிரியரும், நடிகருமான விசுவின் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.[1][2]
துவக்க கால வாழ்கை
[தொகு]இவர் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் தற்போதைய திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடைச் சேர்ந்த சோமையா தேவர்–சத்யபாமா இணையரின் மகனாவார். இவரின் தந்தை சோமையா தேவர் அக்காலகட்டத்திலே பெரும் நிலக்கிழார் (ஜமீன்தார்) ஆவார். பாஸ்கர் நாகப்பட்டினம் அருகே உள்ள காடம்பாடியில் பிறந்து, அங்கேயே வளர்ந்தார். காடம்பாடியில் உள்ள தேசிய பள்ளியில் ஒன்பதாம் வகுப்புவரை படித்தார்.[3]
அக்காலகட்டத்தில் காடம்பாடிக்கு டி. கே. சண்முகம் குழுவினரின் நடகக் குழு நாடகம்போட வந்தது. டி. கே. சண்முகத்திற்கு சோமையா நன்கு பழக்கமானவர். அவர்கள் இராசராச சோழன் நடகத்தை போடும்போது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டிய நடிகை வரவில்லை. அப்போது பாஸ்கரின் அக்காள் ஹேமமாலினியை நடிக்கவைக்க முடிவு செய்தனர். காலையில் கொடுக்கபட்ட வசனங்களை மாலைக்குள் நன்கு மனப்பாடம் செய்து மாலை நடந்த நாடகத்தில் நன்கு நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டு நீங்கள் இங்கு இருப்பதைவிட சென்னைக்கு வருவது நல்லது என்று டி. கே. சண்முகம் சொன்னதன் பேரில் பாஸ்கரின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. கோபாலபுரம் பள்ளியில் தன் எஞ்சிய பள்ளிப்படிப்பை பாஸ்கர் முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி, பி.காம் படித்தார்.
இவரின் முத்த அக்காள்கள் ஹேமாமாலினி சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தார். அப்போது அறிமுகமான செந்தாமரை ஹேமாமாலினியின் குரல் இனிமையைக் கேட்டு திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுக்க ஊக்குவித்தார். மேலும் சிட்டுக்குருவி படத்தில் பின்னணிக் குரல்கொடுக்க வாய்ப்பைப் பெற்றுத்தந்தார். பின்னர் சில்க் ஸ்மிதாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்து புகழ்பெற்றார். பாஸ்கரின் இரண்டாவது அக்கா தாரா வட இந்தியத் திரையில் மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராக உள்ளனர்.
நடிப்பு வாழ்கை
[தொகு]அக்காள் ஹேமாமாலினி பின்னணிக் குரல் கொடுக்கச் செல்லும்போது அவருக்குத் துணையாக பாஸ்கரும் சென்று வருவார். அப்போது ஒருநாள் வழக்கமாக வரும் பின்னணிக் குரல் கலைஞர் வராத காரணத்தால் சிட்டுக்குருவி படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பை பாஸ்கர் பெற்றார்.
இவரின் தந்தை சோமையா தேவர் அப்போது அரசியல் செல்வாக்கு பெற்று இருந்ததால் அன்றைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களும், அரசியல் தலைவர்களுமான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் நட்பு வட்டாரத்தில் இருந்தார். அதை பார்த்து பழகிய மகன் பாஸ்கர் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது தீராத காதல் கொண்டு அவரை போல் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வர வேண்டும் என்று எண்ணத்தையும் பின்னாளில் 1980 காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் மீதான நடிப்பின் தாக்கமும் இவரை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்தது என கூறப்படுகிறது.
இவர் பின்னாளில் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி ஆகியவற்றால் பரவலாக அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[4] இவர் 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]- திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1987 | திருமதி ஒரு வெகுமதி | கிருஷ்ணனுடன் படிக்கும் கல்லூரி மாணவர் | |
| மக்கள் என் பக்கம் | |||
| காவலன் அவன் கோவலன் | |||
| 1989 | அண்ணனுக்கு ஜே | ||
| 1990 | சேலம் விஷ்ணு | பேராசிரியர் | |
| வேடிக்கை என் வாடிக்கை | |||
| 1991 | ஞான பறவை | ||
| 1992 | காவல் கீதம் | பணப்பைத் திருடர் | |
| முதல் குரல் | |||
| 2001 | டும் டும் டும் | மருத்துவர் | |
| கோட்டை மாரியம்மன் | போக்குவரத்துக் காவலர் | ||
| 2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | சங்கரலிங்கம் | |
| தமிழன் | நடத்துநர் கணேசன் | ||
| இவன் | மீனா குமாரியின் தந்தை | ||
| ஜங்சன் | சிவலிங்கம் | ||
| யுனிவர்சிட்டி | |||
| முத்தம் | மாயா | ||
| 2003 | மிலிட்டரி | முத்து | |
| அன்பே அன்பே | இரம்யாவின் தந்தை | ||
| ஆஹா எத்தனை அழகு | |||
| இளசு புதுசு ரவுசு | தீபக்கின் தந்தை | ||
| ரகசியமாய் | |||
| 2004 | எங்கள் அண்ணா | மணி | |
| மச்சி | |||
| அழகிய தீயே | அண்ணாச்சி | ||
| கஜேந்திரா | |||
| போஸ் | வெடிமுத்து | ||
| நெறஞ்ச மனசு | நரியன் | ||
| அட்டகாசம் | பாலியல் மருத்துவர் | ||
| 2005 | திருப்பாச்சி | தரகர் | |
| சுக்ரன் | நகைச்சுவை காவல் ஆய்வாளர் | ||
| அமுதே | டுடு | ||
| நீயே நிஜம் | பாதுகாலர் | ||
| சின்னா | |||
| சிவகாசி | 'வக்கீல்' வெங்கி | ||
| சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி | அழகுசுந்தரம் | ||
| 2006 | இதயத்திருடன் | ||
| அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | மேலாளர் | ||
| திருப்பதி | பி.ஏ. பிரம்மா | ||
| கேடி | ரகுவின் தந்தை | ||
| இளவட்டம் | ஆசிரியர் | ||
| தர்மபுரி | சண்முகம் | ||
| வரலாறு | மனநலம் பாதிக்கப்பட்டவர் | ||
| 2007 | வீராசாமி | வழக்கறிஞர் | |
| மொழி | ஞானப்பிரகாசம் | ||
| சிவாஜி | P.S to chief secretary | ||
| கிரீடம் | காவலர் | ||
| இனிமே நாங்கதான் | விச்சு | ||
| திருத்தம் | புண்ணியகோடி | ||
| அழகிய தமிழ்மகன் | பயிற்சியாளர் | ||
| மச்சக்காரன் | காவல் அதிகாரி | ||
| 2008 | பழனி | ||
| பிரிவோம் சந்திப்போம் | ஆறுமுகம் | ||
| சாது மிரண்டா | - - - | ||
| அஞ்சாதே | லோகநாதன் | ||
| வெள்ளித்திரை | இராம் கோபால் சர்மா | ||
| சந்தோஷ் சுப்பிரமணியம் | கோத்த பெருமாள் (சருக்கு மரம்) | ||
| அறை எண் 305ல் கடவுள் | சொட்டைகருவாபையா குட்டி மாடசாமி | ||
| இயக்கம் | முத்துகுட்டி | ||
| அழைப்பிதழ் | |||
| தசாவதாரம் | பிராடுவே குமார் | ||
| சுட்ட பழம் | குமாரசாமி | ||
| குசேலன் | குப்புசாமியின் உதவியாளர் | ||
| தனம் | |||
| சரோஜா | |||
| தீயவன் | வேலு | ||
| திண்டுக்கல் சாரதி | கவிஞர் - - - | ||
| பஞ்சாமிர்தம் | திருப்பதி | ||
| 2009 | காதல்னா சும்மா இல்லை | ||
| இன்னொருவன் | வாலி | ||
| நாளை நமதே | டிஜிபி புல்லையா | ||
| குரு என் ஆளு | கோபால் | ||
| தோரணை | தமிழரசனின் உதவியாளர் | ||
| மஞ்சள் வெயில் | |||
| மாசிலாமணி | 'கோமா' இராமசாமி | ||
| சிரித்தால் ரசிப்பேன் | பூபதி பாண்டியன் | ||
| ஈசா | துரைசாமி | ||
| உன்னைப்போல் ஒருவன் | பங்கசக்சா | ||
| சூரியன் சட்டக் கல்லூரி | சாமா ஐயர் | ||
| 2010 | தமிழ் படம் | நகுல் | |
| தம்பிக்கு இந்ம ஊரு | |||
| வீரசேகரன் | |||
| இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | ஆத்திரிகேசா | ||
| கொல கொலயா முந்திரிக்கா | சந்தானம் | ||
| மதராசபட்டினம் | வேங்கய்யப்பன் | ||
| இரண்டு முகம் | |||
| 2011 | காவலன் | சக்கரன் | |
| பயணம் | இருமொழித் திரைப்படம் | ||
| தம்பிக்கோட்டை | வளையப்பட்டி | ||
| எத்தன் | சுவாமி | ||
| தெய்வத்திருமகள் | மூர்த்தி | ||
| மார்கண்டேயன் | |||
| புலிவேசம் | செந்தில் | ||
| வேலாயுதம் | வைதேகியின் தந்தை | ||
| 2012 | ஒத்த வீடு | ||
| கொஞ்சும் மைனாக்களே | |||
| கிருஷ்ணவேணி பஞ்சாலை | |||
| தாண்டவம் | தம்பி மாமா | ||
| திருத்தணி | கண்ணாயிரம் | ||
| புதுமுகங்கள் தேவை | |||
| 2013 | சந்தமாமா | கிருஷ்ணமூர்த்தி | |
| கருப்பம்பட்டி | டான் சுடான்லி | ||
| சூது கவ்வும் | ஞானோதயம் | ||
| நாகராஜ சோழன் | கோத்த பெருமாள் | ||
| தீக்குளிக்கும் பச்சைமரம் | |||
| இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | பூச்சாண்டி | ||
| ரகளபுரம் | வின்சென்ட் | ||
| சுட்ட கதை | ஒட்டகம் | ||
| ஆல் இன் ஆல் அழகு ராஜா | தில்லானா திவ்யநாதன் | ||
| 2014 | நேர் எதிர் | நீராவி | |
| நினைத்தது யாரோ | சிறப்புத் தோற்றம் | ||
| நினைவில் நின்றவள் | |||
| காதல் சொல்ல ஆசை | அஞ்சலியின் தந்தை | ||
| ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | |||
| அரிமா நம்பி | எஸ். ஐ. ஆறுமுகம் | ||
| ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | |||
| நீ நான் நிழல் | தம்பியண்ணன் | ||
| ஆ | குரு | ||
| மொசக்குட்டி | மலயாளி | ||
| 13 ஆம் பக்கம் பார்க்க | |||
| அழகிய பாண்டிபுரம் | பாம்புக்குட்டி | ||
| வெள்ளக்கார துரை | தஞ்சாவூர் மகாதேவன் | ||
| 2015 | இவனுக்கு தண்ணில கண்டம் | பொன்வண்டு | |
| வை ராஜா வை | கார்த்திக்கின் மாமா | ||
| உத்தம வில்லன் | சோக்கு செட்டியார் | ||
| இந்தியா பாகிஸ்தான் | மருதமுத்து | ||
| 36 வயதினிலே | சுடீபன் | ||
| டிமான்ட்டி காலணி | சாமிநாதன் | ||
| விந்தை | தமிழாய்ந்த நல்லோன் | ||
| திகர் | தீப்பொறி தங்கப்பன் | ||
| காவல் | குணசேகரன் | ||
| மூணே மூணு வார்த்தை | இராமன் | இருமொழித் திரைப்படம் | |
| பாபநாசம் | சுளைமான் பாய் | ||
| ஆவி குமார் | வெரி குட் சிவாசு | ||
| சவாலே சமாளி | இளங்கோ | ||
| யட்சன் | |||
| அபூர்வ மகான் | |||
| உப்பு கருவாடு | நெய்தல் ஜெயராமன் | ||
| தங்கமகன் | பிரகாஷ் குமாரின் உதவியாளர் | ||
| 2016 | பெங்களூர் நாட்கள் | கண்ணனின் தந்தை | |
| சாகசம் | சதானந்தம் | ||
| நையப்புடை | சத்தியமூர்த்தி | ||
| நட்பதிகாரம் 79 | மகாவின் தந்தை | ||
| நாரதன் | பாஸ்கர் | ||
| உன்னோடு க | மாசுட்டர் | ||
| க க க போ | (எகிப்திய கடவுள்) | ||
| வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி | சரவணனின் நண்பர் | ||
| தர்மதுரை | பரமன் | ||
| காகிதக் கப்பல் | இரணகுப்தா | ||
| மீன் குழம்பும் மண் பானையும் | டான் | ||
| கடவுள் இருக்கான் குமாரு | மைக்கேல் ஆசிர்வாதம் | ||
| கண்ணுல காச காட்டப்பா | சின்னபையன் | ||
| மணல் கயிறு 2 | சோதிடர் | ||
| 2017 | யாக்கை | கதிரின் தந்தை | |
| வைகை எக்ஸ்பிரஸ் | கிங் கேசவன் | ||
| 8 தோட்டாக்கள் | கிருஷ்ணமூர்த்தி | ||
| பிருந்தாவனம் | இலூயிசு | ||
| 7 நாட்கள் | பாஸ்கர் | ||
| மரகத நாணயம் | பாண்டுரங்கன் | ||
| பீச்சாங்கை | தமிழ்மகன் | ||
| சதுர அடி 3500 | சான் பீட்டர் | ||
| பணம் பதினொன்னும் செய்யும் | காளிமுத்து | ||
| இப்படை வெல்லும் | எஸ். தில்லைராஜன் | ||
| குரு உச்சத்துல இருக்காரு | உத்தமன் | ||
| இந்திரஜித் | சலீம் | ||
| திருட்டுப்பயலே 2 | |||
| 12-12-1950 | குமுதவள்ளியின் தந்தை | ||
| 2018 | நிமிர் | சதா | |
| கேணி | |||
| சில சமயங்களில் | இராகவன் | ||
| செம போத ஆகாதே | குஞ்சுண்ணி | ||
| தளரி | மாரி | ||
| நோட்டா | பாய் | ||
| காயங்குளம் கொச்சுண்ணி | முதலாளி | மலையாளத் திரைப்படம் | |
| காற்றின் மொழி | நீலகண்டன் | ||
| பட்டினப்பாக்கம் | தீ தங்கவேல் | ||
| உத்தரவு மகாராஜா | இரவியின் தந்தை | ||
| துப்பாக்கி முனை | உய்யா | ||
| 2019 | திருமணம் | அருணாசலம் | |
| அக்னி தேவி | மணிமாறன் | ||
| குப்பத்து ராஜா | ஊர் நியாயம் | ||
| ஐயகோ | வெங்கட்ராமன் | ||
| ஏ1 | சரவணனின் தந்தை | ||
| கழுகு 2 | மாரி | ||
| பக்ரீத் | வெட்டேரி நரியன் | விருந்தினர் தோற்றம் | |
| 2020 | அசுவதம்மா | மனோச்சின் தாத்தா | தெலுங்குத் திரைப்படம் |
| ஓ மை கடவுளே | அனுவின் தந்தை | ||
| குட்டி தேவதை | |||
| புத்தம் புது காலை | தாத்தா | ||
| 2021 | மாறா | உசுமான் பாய் | |
| சுல்தான் | வழக்கறிஞர் | ||
| வணக்கம்டா மாப்ள | கவுன்சிலர் புண்ணியகோட்டி | ||
| மலேசியா டூ அம்னீசியா | மன்னார்குடி நாராயணன் | ||
| இருவர் உள்ளம் | கார்த்திக்கின் மாமா | ||
| பிரண்ட்ஷிப் | வழக்கறிஞர் சாணக்கியன் | ||
| பேய் மாமா | சபாபதி | ||
| ஜெய் பீம் | வழக்கறிஞர் சங்கரன் | ||
| [[சபாபதி (2021 திரைப்படம்)|]சபாபதி] | கணபதி | ||
| பிளான் பண்ணி பண்ணனும் | கேப்டன் கந்தசாமி / வழுக்கை கந்தசாமி (விகேஎஸ்) | ||
| மதுரை மணிகுறவரன் | மணியின் மாமா | ||
| 2022 | எதற்கும் துணிந்தவன் | கருப்பையா | |
| டாணாக்காரன் | செல்லகண்ணு | ||
| பேட்டரி | புகழின் தாத்தா | ||
| ஓகே ஓக ஜீவிதம் | வண்டி ஓட்டுநர் | ||
| 2023 | கொடை | ஞானம் | |
| குற்றம் புரிந்தால் | ஜீவாவின் மாமா | ||
| எறும்பு | ஆறுமுகம் | ||
| லாக்டவுன் டையரி | |||
| ரெட் சேண்டல்வுட் | |||
| த ரோடு | சுப்பிரமணி | ||
| பார்க்கிங் | இளம்பரிதி | ||
| பாட்டி சொல்லைத் தட்டாதே | சக்தியின் தந்தை | ||
| மதிமாறன் | சுந்தரம் | ||
| 2024 | வடக்குப்பட்டி ராமசாமி | முனுசாமி | |
| வெப்பம் குளிர் மழை | திரி ஐயா | ||
| பூமர் அங்கிள் | சிறப்புத் தோற்றம் | ||
| டபுள் டக்கர் | பிரம்மானந்தம் | ||
| ஒரு தவறு செய்தால் | பரமேசுவரன் | ||
| ஒரு நொடி | சேகரன் | ||
| அக்கரன் | வீரபாண்டி | ||
| சாமானியன் | மூக்கையா | ||
| போட் | முத்தையா | ||
| ரகு தாத்தா | ரகோத்தமன் | ||
| பிரதர் | புயூனிக்சு புஷ்பராஜா | ||
| எமக்கு தொழில் ரொமான்ஸ் |
அறிவிக்கப்படும் | [5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Talent bides its time". The Hindu. 13 November 2009. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/talent-bides-its-time/article3022151.ece.
- ↑ Suganth, M.. "There's no spontaneity in acting; every actor needs to do homework". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Theres-no-spontaneity-in-acting-every-actor-needs-to-do-homework/articleshow/48508566.cms.
- ↑ முதல் சம்பளம்... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1, எம். எஸ். பாஸ்கர், இந்து தமிழ் திசை, 6 அக்டோபர் 2025
- ↑ "The Hindu : Cinema Plus / Cinema : Talent bides its time". web.archive.org. 2009-12-03. Archived from the original on 2009-12-03. Retrieved 2022-09-22.
- ↑ "Ashok Selvan's Emakku Thozhil Romance To Release On This Date!". Times Now (in ஆங்கிலம்). 2024-10-11. Retrieved 2024-10-16.