தகதிமிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகதிமிதா
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புஜி. ஆர். ரவீந்திரா
கதைகே. செல்வபாரதி
திரைக்கதைசுந்தர் சி.
இசைடி. இமான்
நடிப்புயுவ கிருஷ்ணா
அங்கீதா
ஒளிப்பதிவுவிஜய் கே. சக்ரவர்த்தி
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்ஏ.ஜே.ஆர் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 1, 2005 (2005-04-01)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தகதிமிதா (Thaka Thimi Tha) என்பது 2005 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை சுந்தர் சி. இயக்க, புதுமுகங்களான யுவ கிருஷ்ணா மற்றும் அங்கிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [1] [2]

கதை[தொகு]

கிருஷ்ணா (யுவ கிருஷ்ணா) விவேக் ( விவேக்) என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் பணிபுரிகிறார். காயத்ரி (அங்கிதா) ஒரு வானொலி அறிவிப்பாளர். இவர்கள் அண்டை வீட்டுக்காரர்கள். இவர்களது இரு குடும்பங்களுக்கு இடையில் சண்டை தோன்றுகிறது. என்றாலும் இவர்களது குடும்பங்கள் பின்னர் நட்பு கொள்கிறன. இந்த இரு குடும்பத்தாரும் தங்கள் இளம் பிள்ளைகளுக்கு இடையே திருமணத்தை ஏற்பாடு செய்விக்க முடிவு செய்கிறார்கள், ஆனால் அவர்கள் இருவரும் இதற்கு மறுக்கிறார்கள். விவேக் அவர்களுக்கு இதற்கான காரணத்தை சொல்கிறார்.

கிருஷ்ணாவும் காயத்ரியும் கல்லூரியில் ஒருவருக்கொருவர் காதலித்தனர். அப்போது, அவர்களுக்கிடையே சண்டை தோன்றி இருவரும் தங்கள் காதலை முறித்துக்கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்ததும் காயத்ரியின் குடும்பம் யுவாவின் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டிற்கு குடிவந்தது.

அவர்களது இரு குடும்பத்தாரும் விவேக்கும் அவர்களிருவரும் மீண்டும் ஒன்று சேர முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில் காயத்திரியின் உறவினராக ஸ்ரீ (சிறீமன்) அவளது மனதை தன்வசமாக்க முயற்சிக்கிறார். காயத்ரி ஸ்ரீயை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்கிறாள். தங்கள் கல்லூரி நண்பரின் திருமணத்திற்காக, கிருஷ்ணாவும் காயத்ரியும் செல்கின்றனர். விவேக்கும், அவர்களது கல்லூரி தோழர்கள் கிருஷ்ணாவையும் காயத்ரியையும் மீண்டும் ஒன்றாக்க முயற்சிக்கிறார்கள். கிருஷ்ணருக்கு மன மாற்றம் ஏற்படுகிறது. அவன் ஒரு பாடலால் அவளை சமாதானப்படுத்துகிறான், முடிவில் இருவரும் சமரசம் ஆகிறார்கள்.

நடிகர்கள்[தொகு]

இசைப்பதிவு[தொகு]

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்தார். [3] [4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "இத ஊத்தி செஞ்சேனோ"  டி. இமான், அனுராதா ஸ்ரீராம்  
2. "ஹூடிபாபா"  பிராங்கோ, பிரேம்ஜி அமரன்  
3. "இது கல்லூரியல்ல"  ஹரிஷ் ராகவேந்திரா  
4. "இம்சை உனக்கு"  ஸ்ரீநிவாஸ்  
5. "காதலி யாரடி"  ஹரிஹரன், மாதங்கி  
6. "Kanne I Love You"  சுசித்ரா, மகேஷ் விநாயகம்  
7. "ஒன்னா ரவுண்டு"  வாசு, சோலார் சாய், பிரசன்னா ராவ், டி. எஸ். ரங்கநாதன்  
8. "ராயலசீமா ராணி"  கார்த்திக், அனிதா உதீப்  
9. "சுலுக்கி சுலுக்கேடுக்கும்"  தேவன், மாலதி  

வெளியீடு[தொகு]

குறைந்த செலவில் எடுகப்பட்ட படங்களான கிரிவலம் மற்றும் குருதேவா ஆகியவை வெளிவந்தபோது அவற்றுடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. [5]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-03-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.indiaglitz.com/thakka-thimi-tha-tamil-movie-review-7401.html
  3. http://play.raaga.com/tamil/album/Thaka-Thimi-Tha-songs-T0000662
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-23 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-01-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-23 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகதிமிதா&oldid=3556901" இருந்து மீள்விக்கப்பட்டது