அழகான நாட்கள்
அழகான நாட்கள் | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | எஸ். டி. செல்வன் |
கதை | பூபதி பாண்டியன் (உரையாடல்) |
திரைக்கதை | சுந்தர் சி. |
இசை | தேவா |
நடிப்பு | கார்த்திக் ரம்பா மும்தாஜ் (நடிகை) |
ஒளிப்பதிவு | பிரசாத் முரெல்லா |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | கௌதமி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 7 திசம்பர் 2001 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழகான நாட்கள் (Azhagana Naatkal) என்பது 2001 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்தை சுந்தர் சி. இயக்க, கார்த்திக் மற்றும் ரம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் உள்ளத்தை அள்ளித்தா (1996) மற்றும் உனக்காக எல்லாம் உனக்காக (1999) ஆகியவற்றின் வெற்றிகளுக்குப் பிறகு சுந்தருடன் இந்த ஜோடியின் மூன்றாவது படமாக இது இருந்தது. இப்படத்தில் மும்தாஜ், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படத்திற்கு தேவா இசையமைத்தார். 7 திசம்பர் 2001 அன்று வெளியான இப்படம், மலையாள திரைப்படமான மின்னாராமின் மறு ஆக்கம் ஆகும், மேலும் இது ஜெய்சங்கரின் திரைப்படமான பெண்ணே நீ வாழ்க படத்தை அடிப்படையாகக் கொண்டது.[1][2]
கதை
[தொகு]இந்துவும் சந்திருவும் (ரம்பா மற்றும் கார்த்திக்) காதலிக்கிறார்கள். இந்து தீடீரென்று காணாமல் போகிறாள் சந்திருவுக்கு ரேகாவுடன் (மும்தாஜ்) நிச்சயதார்த்தம் ஏற்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறுமியுடன் இந்து மீண்டும் வருகிறாள். அந்த சிறுமி சந்திருவின் மகள் என்று கூறுகிறாள். சந்திரு அதை கடுமையாக மறுத்து, அதன் உண்மையை அறிய முயற்சிக்கிறான். நகைச்சுவையான பல காட்சிகளுக்குப் பிறகு, இந்துவின் சகோதரியை மயக்கிய சந்திருவின் திருமணமான சகோதரனின் சட்டவிரோத மகள் அந்தப் பெண் என்பதை அறியவருகிறது. வில்லனான அவனது சகோதரனின் பயனற்ற முயற்சிக்குப் பிறகு, ரேகாவிடம் மன்னிப்பு கேட்காமல் சந்திரு இந்துவை வேகமாக அடைகிறான். ரேகா எந்த விளக்கமும் அளிக்காமல் ஆரம்பக் காட்சியில் இந்து காணாமல் போன்ற செயலைச் செய்கிறாள்.
நடிகர்கள்
[தொகு]- சந்துருவாக கார்த்திக்
- இந்துவாக ரம்பா
- ரேகாவாக மும்தாஜ் (நடிகை)
- ரஞ்சித்தாக கவுண்டமணி
- ராஜசேகராக மணிவண்ணன்
- மகாலியாக செந்தில்
- காணவாக ராஜீவ்
- சோமசுந்தரமாக டெல்லி கணேஷ்
- சோமசுந்தராமின் மருமகனாக பொன்னம்பலம்
- சண்டைக்காரராக தளபதி தினேஷ்
- மருத்துவராக மதன் பாப்
- குணாவின் மனைவியாக சபிதா ஆனந்த்
- ஆசாவாக ஜோதி மீனா
- சித்ரா லட்சுமணன்
- அனு மோகன்
- வெங்கல் ராவ்
- முத்துக்காளை
- மைக்கேலாக பாண்டியராஜன் (விருந்தினர் தோற்றம்)
தயாரிப்பு
[தொகு]சிம்ரன் முதலில் ரம்பாவுக்கு பதிலாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டிருதார்.[3] இது 1994 மலையாள திரைப்படமான மின்னரத்தின் தமிழ் மறு ஆக்கம் ஆகும்.[4]
இசை
[தொகு]படத்திற்கு தேவா இசையமைத்தார்.[5][6]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
---|---|---|---|
1 | "அடி தேவதையே" | திப்பு, "மகாநதி" ஷோபனா | பா. விஜய் |
2 | "சிக் சிக் சின்னக்கிளியே" I | சுஜாதா, எஸ். பி. பி. சரண் | |
3 | "சிக் சிக் சின்னக்கிளியே" II | ஹரிஹரன், ஷைசன் | |
4 | "இஷா இஷா" | மனோ, அனுராதா ஸ்ரீராம் | |
5 | "கதல் ஓகே" | சங்கர் மகாதேவன், சுஜாதா | கலைகுமார் |
6 | "உடுகயா உடுகயா" | மால்குடி சுபா | பா. விஜய் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Azhagana Naatkal". Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
- ↑ "Azhagana Naalgal". archive.org. 19 August 2003. Archived from the original on 19 August 2003. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ https://web.archive.org/web/20001207075900/http://movies.indiainfo.com/tamil/movienews/morenews2.html
- ↑ "Simran to wed". archive.org. 25 October 2004. Archived from the original on 25 October 2004. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ "Azhagana Naatkal songs". Gaana.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
- ↑ "Azhagana Natkal (Original Motion Picture Soundtrack)". Apple Music. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
வெளி இணைப்புகள்
[தொகு]- மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- 2001 தமிழ்த் திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- ரம்பா நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சுந்தர் சி இயக்கிய திரைப்படங்கள்