உள்ளத்தை அள்ளித்தா
உள்ளத்தை அள்ளித்தா Ullathai Allitha | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | என். பிரபாவதி என். சோதிலட்சுமி என். விஷ்ணுராம் என். ரகுராம் |
திரைக்கதை | சுந்தர் சி. |
வசனம் | கே. செல்வபாரதி |
இசை | சிற்பி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | யு. கே. செந்தில்குமார் |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு |
கலையகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
விநியோகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
வெளியீடு | சனவரி 15, 1996 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
உள்ளத்தை அள்ளித்தா (Ullathai Allitha) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிறப்பான வெற்றித் திரைப்படமான இப்படம் சிற்பி இசையமைத்த திரைப்படமாகும்.
இப்படம் சபாஷ் மீனா மற்றும் இந்தி மொழியில் வந்த 'அந்தாஸ் அப்னா அப்னா' போன்ற திரைப்படங்களைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.[1]
நடிகர்கள்[தொகு]
- கார்த்திக் - ராஜாவாக
- ரம்பா - இந்து
- கவுண்டமணி - வாசுவாக
- மணிவண்ணன்- விஸ்வநாதன் மற்றும் காசிநாதனாக
- ஜெய்கணேஷ் - சந்திரசேகராக
- செந்தில் -விஸ்வநாதனின் மேலாளராக
- பாண்டு விஸ்வநாதனின் மேலாளராக
- ஜோதி மீனா-மீனாவாக
- கசான் கான்- ஷங்கர்
- விச்சு விஸ்வநாத்- சந்திரசேகரின் மேலாளராக
- கே.செல்வ பாரதி
- கருப்பு சுப்பையா- சேத்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஓல்டு இஸ் கோல்டு: ‘சபாஷ் மீனா’வை ஒப்பிட்டு பேசப்பட்ட படம்!". தினமலர். 17 ஆகஸ்ட் 2017 இம் மூலத்தில் இருந்து 2021-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210511070858/http://www.dinamalarnellai.com/web/news/33164. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2020.