ரெண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெண்டு
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புகுஷ்பூ
கதைவேலம் சி. மனோகர் (வசனம்)
திரைக்கதைசுந்தர் சி.
சுபா
இசைடி. இமான்
நடிப்புமாதவன்
ரீமா சென்
அனுஷ்கா
ஒளிப்பதிவுபிரசாத் முரேல்லா
படத்தொகுப்புகாசி விஸ்வநாதன்
கலையகம்அவினி சினிமேக்ஸ்
விநியோகம்ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்
வெளியீடு24 நவம்பர் 2006
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ரெண்டு (Rendu) 2006 ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென், அனுஷ்கா மற்றும் வடிவேலு நடிப்பில், சுந்தர் சி. இயக்கத்தில், குஷ்பூ தயாரிப்பில், டி. இமான் இசையில் வெளியான தமிழ் நகைச்சுவை அதிரடித் திரைப்படம். மாதவன் இரு வேடங்களில் நடித்த திரைப்படம் ஆகும்.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

சென்னைக்கு வேலை தேடி வரும் சக்தி (மாதவன்) பொருட்காட்சியில் மாயவித்தை தொழில் செய்துவரும் தன் மாமா கிரிகாலனுடன் (வடிவேலு) தங்குகிறான். அதே பொருட்காட்சியில் அவர்களுக்குப் போட்டியாக கடற்கன்னியாக வேடமிட்டு தொழில் செய்துவருபவள் வள்ளி (ரீமாசென்). சக்தியும் வள்ளியும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர்.

இதே சமயம் வெவ்வேறு இடங்களில் நடக்கும் கொலைகளைப் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரிக்கு (பாக்கியராஜ்) அந்தக் கொலையாளியின் புகைப்படம் கிடைக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் கொலையாளியின் உருவம் சக்தியைப் போல இருப்பதால் நிரபராதியான சக்தி கைது செய்யப்படுகிறான். தான் செய்த கொலைகளுக்கு ஒரு நிரபராதி கைது செய்யப்பட்டதை அறியும் கண்ணன், (மாதவன் 2) கிரிகாலன் மற்றும் வள்ளியின் உதவியுடன் சக்தியைக் காப்பாற்றுகிறான். தான் அந்த கொலைகளைச் செய்ததற்கான காரணத்தைக் கூறுகிறான்.

கண்ணனின் குடும்பத்தினர் அனைவரும் அவன் காதலி ஜோதி (அனுஷ்கா) உட்பட ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் தீவிபத்தில் இறக்கின்றனர். அந்த விபத்திலிருந்து தப்பிக்கும் கண்ணன் தன் பார்வையை இழக்கிறான். ஆனால் நடந்தது விபத்தல்ல தங்களின் எதிரிகள் திட்டமிட்டு செய்த கொலை என்று அறியும் கண்ணன் அதற்குக் காரணமானவர்களைக் கொன்று பழிதீர்க்கிறான்.

கண்ணன் செய்வது சட்டப்படி தவறாக இருந்தாலும் அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை உணரும் சக்தி அவனுக்கு உதவ முடிவுசெய்கிறான். இருவரும் சேர்ந்து எதிரிகளை அழித்தார்களா? என்பதே முடிவு.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

அனுஷ்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[2]

1993 இல் ரசினிகாந்த் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான வள்ளி திரைப்படத்தின் கதாநாயகன் ஹரிராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்தார்.[3]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் டி. இமான். பாடலாசிரியர்கள் பா. விஜய் மற்றும் தபுசங்கர்.[4]

வ.எண் பாடல் பாடகர்கள்
1 யாரோ எவளோ ரஞ்சித்
2 குறை ஒன்றுமில்லை ஆதர்ஷ், ஜெய்
3 மொபைலா மொபைலா டி. இமான், மாயா
4 நீ என் தோழியா நரேஷ் ஐயர், சுஜாதா
5 வரட்டா வரட்டா ஆதர்ஷ், லாவண்யா

மேற்கோள்கள்[தொகு]

  1. "மாதவன் இரு வேடங்கள்".
  2. "ரீமா vs அனுஷ்கா".
  3. "வள்ளி 1993 நாயகன் ஹரிராஜ்".
  4. "ரெண்டு பாடல்கள்". Archived from the original on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெண்டு&oldid=3693825" இலிருந்து மீள்விக்கப்பட்டது