உள்ளடக்கத்துக்குச் செல்

சுபா (எழுத்தாளர்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ், ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனைப் பெயராகும். இவர்கள் இருவரும் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றனர்.

எழுத்துப்பணி

[தொகு]

இவ்விரு நண்பர்களும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதைகளை சேர்ந்து எழுதியுள்ளனர். மேலும் 1979-லிருந்து அவற்றை வெளியிட்டு வருகின்றனர். இவர்களிருவரும் குறைந்தபட்சம் 450 குறு நாவல்களையும், 400 சிறு கதைகளையும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதைகளையும் எழுதியுள்ளனர். கனா கண்டேன், அயன் ஆகிய திரைப்படங்கள் சுபாவின் நாவல்களை தழுவி அமைந்துள்ளவை. மேலும் இவற்றின் திரைக்கதை சுபா மற்றும் கே. வி. ஆனந்த் ஆகியோரால் எழுதப்பட்டது. கோ திரைப்படத்தின் திரைக்கதையும் சுபா மற்றும் கே. வி. ஆனந்த் ஆகியோரால் எழுதப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த 180 திரைப்படத்தின் திரைக்கதை சுபா மற்றும் ஜெயேந்திரா ஆகியோரால் எழுதப்பட்டது.[1]

இவர்களின் பெரும்பாலான புதினங்களில் ஈகிள் ஐ டிடக்டிவ் ஏஜென்சியின் நரேந்திரன், வைஜயந்தி ஆகிய கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும், மேலும் ஜான் சுந்தர், செல்வா, முருகேசன் ஆகியவையும் இவர்கள் உருவாக்கிய முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chakravarthy, Pritham (2008). The Blaft Anthology of Tamil Pulp Fiction. Chennai, India: Blaft Publications. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-906056-0-1. {{cite book}}: Cite has empty unknown parameters: |origmonth=, |month=, |chapterurl=, and |origdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபா_(எழுத்தாளர்கள்)&oldid=4015468" இலிருந்து மீள்விக்கப்பட்டது