உள்ளடக்கத்துக்குச் செல்

வந்தா ராஜாவாதான் வருவேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தா ராஜாவாதான் வருவேன்
சுவரிதழ்
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
கதைசெல்வ பாரதி (வசனங்கள்)
திரைக்கதைசுந்தர் சி.
இசைகிப்கொப் தமிழா
நடிப்புசிலம்பரசன்
மேகா ஆகாஷ்
காத்ரீன் திரீசா
பிரபு
ரம்யா கிருஷ்ணன்
நாசர்
மஹத் ராகவேந்திரா
யோகி பாபு
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புN. B. ஸ்ரீகாந்த்
கலையகம்லைக்கா தயாரிப்பகம்
வெளியீடு1 பெப்ரவரி 2019 (2019-02-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்மதிப்பீடு. 9 கோடி (உள்நாடு)[1]

வந்தா ராஜாவாதான் வருவேன் (Vantha Rajavathaan Varuven) 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சுந்தர் சி. இயக்கியுள்ளார். லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் சிலம்பரசன், காத்ரீன் திரீசா, மற்றும் மகேஷ் ஆகாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், மஹத் ராகவேந்திரா, மற்றும் யோகி பாபு ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] கிப்கொப் தமிழா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் வெளியான பவன் கல்யாண் மற்றும் சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்த அத்தாரிண்டிகி தாரேதி திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.[3] இத்திரைப்படத்தின் தலைப்பானது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் சிலம்பரசன் பேசும் வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது.[4]

கதைக்களம்

[தொகு]

இரகுநந்தன் இசுபெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டைஅடிப்படையாகக் கொண்ட பணக்காரத் தொழிலதிபர் ஆவார். ஆனால், அவரின் மனம் மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்தது. பிரகாசை அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததால் அவரை விட்டுப் பிரிந்த மகள் நந்தினியுடன் சமரசம் செய்ய விரும்புகிறார். அவரது பேரன் ஆதி இரகுநந்தனின் 80 ஆவது பிறந்தநாளில் அவளை மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதாக உறுதியளிக்கிறார். நந்தினிக்கு மாயா மற்றும் பிரியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பிரகாசை மாரடைப்பிலிருந்து காப்பாற்றிய பின்னர் ஆதி ராஜா என்ற ஓட்டுநராக வீட்டிற்குள் நுழைகிறார். ராஜா பிரியாவை கவர்ந்திழுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவள் வேறொருவரைக் காதலிக்கிறாள் என்பதை அறிந்ததும் கைவிடுகிறார். மாயா ராஜாவை வெறுப்பதோடு, அவனை சந்தேகிக்கவும் செய்கிறாள். இந்த சம்பவங்களுக்கு முன்பே ராஜாவின் உண்மையான அடையாளத்தை அறிந்திருப்பதாக நந்தினி பின்னர் வெளிப்படுத்துகிறார், மேலும் தன்னை மீண்டும் இரகுநந்தனிடம் அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் எதையும் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கிறார்.

பிரியாவின் காதலைக் காப்பாற்ற, ராஜா மற்றும் பக்கெட் ஒரு கிராமத்திற்குச் செல்கிறார்கள். தற்செயலாக, மாயா ஜீப்பில் இருந்து விழுந்து தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மறதி நோயால் பாதிக்கப்படுகிறார். ராஜா தன்னை அவளது காதலனாக தற்போதைக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறான். மாயா அதை நம்புகிறார். மூவரும் தாங்கள் தேடி வந்த இடத்திற்குச் செல்கிறார்கள். ராஜா மற்றும் பக்கெட் வீட்டிற்குள் நுழைகிறார்கள். அவர்களும் மணமகனும் மணமகனின் குடும்ப உறுப்பினர்களுடன் வன்முறை மோதலுக்குப் பின்னர் அங்கிருந்து தப்புகிறார்கள். இத்தருணத்தில் மாயாவின் நினைவு திரும்புகிறது. மணமகனின் குடும்ப உறுப்பினர்களுடன் வன்முறை மோதலுக்குப் பிறகு நந்தினியின் வீட்டிற்கு வருகிறார்கள். மணமகனின் தந்தை பண்டித்துரை, ராஜாவால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கேட்கிறார், இதற்கு நந்தினி மாயாவை பாண்டித்துரையின் இரண்டாவது மகன் சரவணனுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். சிக்கல்களைத் தவிர்க்க, பிரகாஷ் ராஜாவைச் சுடுகிறார். மாயா ஆரம்பத்தில் இருந்தே ராஜாவை நேசித்ததையும், ஆனால், அவளுடைய உணர்வுகளை வெளிப்படுத்த தயங்கியிருக்கிறாள் என்பதையும் ராஜா பின்னர் அறிகிறான். பாண்டித்துரையின் மூத்த மகன் அழகு, மாயாவைத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் ராஜாவால் பலமுறை முறியடிக்கப்படுகின்றன. திருமணமான நாளில், மாயா ராஜாவுடன் ஓடிப்போகிறார். கோயம்புத்தூருக்கான ரயிலுக்காக ராஜாவுடன் காத்திருந்தபோது, பாண்டித்துரையின் ஆட்கள் அவர்களைத் தடுக்க நிலையத்தை அடைகிறார்கள், ரோசன் தலைமையிலான ராஜாவின் உதவியாளர்களால் அவர்கள் அடித்து வீழ்த்தப்படுகிறார்கள். ரோசனின் மூலம், ராஜாவின் உண்மையான நோக்கம் மாயாவுக்குத் தெரிய வருகிறது. கோபமடைந்த பிரகாஷ், நந்தினியுடன், ராஜாவைச் சுட வருகிறார், ஆனால் பிரகாஷ் ஆதி என்ற ராஜாவின் உண்மையான அடையாளத்தை அறிந்ததும் அதிர்ச்சியடைகிறார். நந்தினி வீட்டை விட்டு வெளியேறிய நாளில், இரகுநந்தன் தற்கொலைக்கு முயன்ற போது, தற்செயலாக ஆதியின் தாயைக் கொன்றதாக ஆதி வெளிப்படுத்துகிறார். இரகுநந்தன் தனது தாயைக் கொன்ற போதிலும், தாத்தாவை நேசிக்கத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறுகிறார். பிரகாஷை காயப்படுத்தி அவர்களை வெளியேற்றியதால் நந்தினி அவரை வெறுக்க முடிவு செய்து அதன்படி வாழ்ந்து வந்தார். நந்தினியும் பிரகாசும் தங்கள் முட்டாள்தனத்தை உணர்ந்து ஆதியுடன் சமரசமாகிறார்கள். அழகு மூலமாக நியமிக்கப்பட்ட நான்கு அடியாட்களால் மாயா கடத்தப்படுகிறார், அங்கு அவர் கதையை அடியாட்களுக்கு விவரிக்கிறார். ஆதியும் பக்கெட்டும் அந்த இடத்தை அடைகிறார்கள். மாயா ராஜாவுடன் சமரசம் செய்து கொள்கிறாள். பாண்டித்துரை கைது செய்யப்பட்டார். இரகுநந்தன் நந்தினியுடன் சமரசமாகிறார். மேலும், இரகுநந்தனின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதி ஏகமனதாக நியமிக்கப்படுகிறார். இ ரகுநந்தன் மற்றும் நந்தினியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து ஆதி ரகுநந்தனின் கையை பாசத்துடன் பிடித்துக் கொள்வதுடன் படம் முடிகிறது.

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2018 இல் ஜியார்ஜியாவில் தொடங்கியது.[5]

மேற்கோள்கள்

[தொகு]