கடற்கன்னி
ஒரு கடற்கன்னி - யோன் வில்லியம் வோட்டர்கவுஸ் | |
குழு | புராணம் |
---|---|
உப குழு | நீர் ஆவி |
ஒத்த உயிரினம் | கடல் மனிதன் சைரன் ஆன்டைன் |
தொன்மவியல் | உலக புராணக்கதை |
நாடு | உலகளவில் |
வாழ்விடம் | சமுத்திரம், கடல் |
கடற்கன்னி (mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும்.[1]கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில் காணப்பட்டது. அட்டாகடிசு எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும் அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல், அவை மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியுமென்று கூறுகின்றது.
குறிப்புக்கள்[தொகு]
- ↑ "Oxford Dictionaries". 20 நவம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
மேலதிக வாசிப்பு[தொகு]
- Kraß, Andreas (2010). Meerjungfrauen. Geschichten einer unmöglichen Liebe. Frankfurt am Main: Fischer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-10-038195-8. https://archive.org/details/meerjungfrauenge0000kras. (செருமன் மொழி)