பட்டி (புராண மிருகம்)
Jump to navigation
Jump to search
பட்டி என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவ லோகத்தில் வாழ்கின்ற பசுவான காமதேனுவின் மகளாவாள். காமதேனுவிற்கு நந்தினி என்ற மற்றொரு மகளும் உண்டு.[1]
பட்டீஸ்வரம் வரலாறு[தொகு]
பிரம்மாவினைப் போல காமதேனுவிற்கும் படைக்கும் தொழில் செய்யும் ஆசை வந்தது. எனவே காமதேனு புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தினை பால் சொரிந்து வணங்கி வந்தது. ஒருநாள் காமதேனுவுடன் வந்த பட்டி விளையாடியபடியே புற்றினை உதைத்து உடைத்தது. அதனைக் கண்ட காமதேனு சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரியது.
அதன் பின் பட்டியின் குளம்படியை சிவபெருமான் ஏற்றுக்கொள்வதாகவும், அத்தலம் பட்டீஸ்வரம், பட்டிபுரி என்றும் அழைக்கப் பெறுவதாகவும் வரமளித்தார்.[2] அத்தலம் இப்போது கோவை மாவட்டத்திலுள்ள பேரூரில் பட்டீசுவரர் திருக்கோயில் என்ற பெயரில் உள்ளது.
கருவிநூல்[தொகு]
இவற்றையும் காண்க[தொகு]
ஆதாரம்[தொகு]
- ↑ http://justknow.in/city_temples_detail.php?TEMPLE_id=89&scsscc=Kumbakonam[தொடர்பிழந்த இணைப்பு] காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் இருந்தது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)