உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்டைனின் தூக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர் அணங்கு ஆன்டைன்

ஆன்டைனின் தூக்கம் (Sleep of Ondine) என்பது ஒரு செருமானிய நாட்டுப்புறக் கதை ஆகும். ஆன்டைன் என்பவள் அமரத் தன்மை உடைய அழகியதொரு நீரணங்கு ஆவாள். அவள் மனிதரைக் காதலிப்பாளேயாயின் அவளது சாகா வரம் போய் விடும் என்பது அவளது விதி.

கடைசியாக லாரன்சு எனும் செருமானிய வீரன் ஒருவன் மீது அவள் காதல் கொள்கிறாள். அவர்களது திருமணத்தின் போது லாரன்சு “விழித்திருக்கும ஒவ்வொரு மூச்சிலும் நான் உ‌ன்னை என்றென்றும் காதலிப்பேன்!” என உறுதியளிக்கிறான். ஓர் ஆண்டிற்குப் பின் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அன்று முதல் ஆன்டைனின் அழகும் குறைந்தது. இதனால் லாரன்சுக்கு மனைவி மீதான காதல் குறையத் துவங்கியது.

ஒரு நாள் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை ஆன்டைன் பார்த்தாள். அவனை எழுப்பிய ஆன்டைன் இவ்வாறு சாபமிட்டாள். 'நீ விழித்திருக்கும் ஒவ்வொரு மூச்சிலும் என் மீது அன்பாய் இருப்பதாய் உறுதி சொன்னாய். அப்படியே இருக்கட்டும். இனிமேல் நீ விழித்திருக்கும் வரை மட்டுமே மூச்சு விடுவாய்'

அவனும் முடிந்த மட்டும் தூங்காது விழித்திருந்து விழித்திருந்து பார்த்தான். இறுதியில் உறங்கிப் போனான். அத்தோடு அவன் மூச்சும் நின்று போனது.

நோய்நிலை[தொகு]

ஆன்டைனின் சாபம் (Ondine's curse) என்பது பிறவி மைய குறைமூச்சுக் கூட்டறிகுறியின் (Congenital Central Hypoventilation Syndrome) இன்னொரு பெயர் ஆகும். இந்நோயாளிகள் தானாகவே மூச்சு விடும் திறனை இழந்தவர்கள். ஒவ்வொரு மூச்சையும் இவர்கள் வலியத் துவங்க வேண்டும். இவர்கள் உறங்கினால் மூச்சு விடுதல் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு விடும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chin, Terry. "Congental Central Hypoventilation Syndrome." EMedicine. 27 November 2006. 17 September 2008 <http://www.emedicine.com/ped/topic1645.htm>.
  2. Lovell BL et al,[1], "Emerg Med J". 2010 Mar;27(3):237-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டைனின்_தூக்கம்&oldid=2744578" இலிருந்து மீள்விக்கப்பட்டது