தேவதர்சினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவதர்சினி
பிறப்புதேவதர்சினி நீலகண்டன்
இந்தியா
மற்ற பெயர்கள்தேவதர்சினி சேத்தன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1995 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சேத்தன்

தேவதர்சினி ஒரு தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தொலைக்காட்சி நடிகரான சேத்தனை திருமணம் செய்து கொண்டார்.

திரைத்துறை[தொகு]

குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர் அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக. 1997-ல் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தவர் ஜெ.ஜெ டி.வி, சன் டி.வி-களின் நிகழ்ச்சிகளைத் தொகுக்கத் தொடங்கினார். சென்னையில் இருப்பவர்களே, 'என்னது நடிக்கப்போறியா..?' என ஆச்சர்யமாகக் கேட்கும் காலம் அது. எத்திராஜ் கல்லூரிப் பெண்கள் இதில் கொஞ்சம் முன்னேறிப் பொதுச் சமூகக் கட்டுகளை உடைத்து வெளியே வரத் தொடங்கினார்கள்.

சன் டி.வி-யில் நிகழ்ச்சிகளைத் தொகுத்த உமா பத்மநாபன் இவரது புகைப்படம் கேட்கவும் கொடுத்திருக்கிறார். கவிதாலயா கிருஷ்ணன் இவரது புகைப்படம் பார்க்க, 'கனவுகள் இலவசம்' வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 'மர்மதேசம்' சீரியல் இவரது திரைப் பயணத்துக்கான திறவுகோல். பள்ளி, கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ்ந்தவர் ஆடிட்டர் கனவைத் தள்ளிப் போட்டுவிட்டு சின்னத்திரையில் தடம் பதிக்கத் தயாரானார். தந்தை கல்லூரி முதல்வர், தாய் பள்ளி முதல்வர் என ஓரளவுக்கு பிரச்னை இல்லாத சூழல் என்பதால் கனவை நோக்கிய பயணம் தெளிந்த நீரோடையைப் போல் ஆனது. ஆடிட்டர் கனவை எப்போதும் எட்டலாம் என நடிக்கத் தொடங்கியவர், இப்போது சைக்காலஜி படித்திருக்கிறார். நடிப்புக்குப் பிறகு ஆடிட்டிங்கில் இறங்கும் எண்ணமும் இருக்கிறதாம்.

கனவுகள் இலவசம்' தொடர் சிறியது என்பதால் விடுமுறை நாள்களில் நடிப்பதே போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால், 'மர்மதேசம்' ஒன்றரை ஆண்டு தொடரும் சீரியல். கல்லூரி முடித்ததும் மாலை வேளைகளில், கல்லூரி விடுமுறை நாள்களில் நடிக்க ஆரம்பித்தவர், பிறகு நடிப்பை முதன்மையாக்கி தொலைநிலைக் கல்வியில் எம்.காம் படிக்கும் நிலை உருவானது. ஆரம்ப காலத்தில் ஃப்ரேம் பொசிஸனுக்குள் நிற்கத் தெரியாது... ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் சரியாக வராது... டயலாக் டெலிவரியை மட்டுமே கையில் இருக்கும் அம்பாக நினைத்துத் திரைநாணேற்றினார்.  அத்தனையையும் கற்றுக்கொண்டது அதன்பிறகுதான்.

நடிக்கப் போவது, அலுவலகத்துக்கு தினமும் வேலைக்குப் போவதைப்போல அத்தனை எளிதானதொன்றுமில்லை. திரையுலகின் மீதான ப்ரியம் எல்லாவற்றையும் தாங்க வைத்தது. 'மர்மதேசம்' ஷூட்டிங்கில் பார்த்த நடிகர் சேத்தனை 2002-ல் கரம்பிடித்தார். இவரின் பயணத்திற்குப் பின்னே இவரது கணவரும் உடன் நிற்கிறார். 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார். தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. வீட்டிலிருக்கும் பெண்கள் தேவதர்ஷினியைத் தங்களுடைய பிம்பமாகவே பார்க்கத் தொடங்கினார்கள். சின்னத்திரையில் மின்னிய காலத்தில் சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நேரமின்மையால் தள்ளிப்போட்டவருக்கு 'பார்த்திபன் கனவு' திரைப்படம் அடித்தளமாகிறது. முதல் படத்திற்கே தமிழ்நாடு அரசின் விருது பெறுகிறார். 'காக்க காக்க', எனக்கு 20 உனக்கு 18' எனச் சில படங்களிலும் கமிட் ஆகிறார். சினிமாவில் நிகழ்கிற ஒரு துன்பியல் உண்மை... ஒரு வருடம் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தாலே போதும்... 'அவங்க இப்போ நடிக்கிறதையே விட்டுட்டாங்களே' எனக் கிளப்பிவிட்டு விடுவார்கள். அவற்றையெல்லாம் கடந்துவந்து தன்னை நிரூபிக்க நிறையப் போராட வேண்டியிருக்கும். இதோ 20 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இப்போதும், சின்னத்திரையில் காமெடி ஷோவில் தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார். திரைப் பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திறம்ப்டக் கையாண்டு வாள் சுழற்றுகிறார்.

ஒரு ப்ரேக்குக்குப் பிறகு, 2010-ல் 'காஞ்சனா' திரைப்படம். கோவை சரளாவோடு காமெடி வொர்க்-அவுட் ஆனது. ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்குப் பிறகு காமெடி ரோலின் ரிலே குச்சியை நெடுந்தூரம் எடுத்துச்செல்ல யாருமில்லை. அண்ணி, அக்கா கேரக்டர்களில் நடித்தபடி காமெடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் 'காஞ்சனா' திரைப்படத்தில் நடித்ததற்காக 'சிறந்த நகைச்சுவை நடிகை' விருது பெறுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருது அவருக்கு இன்னும் உத்வேகத்தைக் தரக்கூடும். இவரது கணவர் சேத்தனும் தமிழ்நாடு அரசின் விருதைப் பெறவிருப்பது ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர். ஆண் காமெடி நடிகர்களைப் போலப் பெண்களுக்குத் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் வருவதில்லை. கிடைக்கும் ஒன்றிரண்டு திரைப்படங்களில் தலைகாட்டிக் காணாமல்போகும் நடிகைகள் என நிறைய பேரை உதாரணமாகச் சொல்லலாம். இந்த நிலை மாறி, நகைச்சுவை கேரக்டர்களுக்காக நடிகைகளுக்கும் ஸ்கோப் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார் தேவதர்ஷினி.

வாய்ப்புகள் எப்போதாவதுதான் தேடிவரும்... கிடைக்கிற வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்து மேலேறினால் வெளிச்சம். கண்கூசும் வெளிச்சத்திற்குத் தாக்குப்பிடித்து நிலைபெறுவது அவரவர் திறமை. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதுதான் இவரது அனுபவங்கள் சொல்லும் பாடம்.

திரைத்துறை[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 காக்க காக்க சுவாதி சிறீக்காந்து தமிழ்
எனக்கு 20 உனக்கு 18 சிறீதரின் அக்கா தமிழ்
காதல் கிறுக்கன் மருத்துவர் தமிழ்
பார்த்திபன் கனவு அமுதா தமிழ் தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது
2004 அழகிய தீயே தமிழ்
2005 குருதேவா தமிழ்
6'2 மீனாட்சி தமிழ்
பொன்னியின் செல்வன் தமிழ்
கண்ட நாள் முதல் கிருஷ்ணாவின் அக்கா தமிழ்
2006 சரவணா சரவணணின் அண்ணி தமிழ்
ரெண்டு மாதவனின் அக்கா தமிழ்
2007 தீபாவளி சுமதி தமிழ்
கிரீடம் தமிழ்
எவனோ ஒருவன் தமிழ்
2008 'பிரிவோம் சந்திப்போம் சேரனின் அண்ணி தமிழ்
சரோஜா தேவதர்சினி தமிழ் சிறப்புத் தோற்றம்
2009 படிக்காதவன் கவுசல்யா தமிழ்
புதிய பயணம் தமிழ்
சொல்ல சொல்ல இனிக்கும் தமிழ்
2010 கொல கொலயா முந்திரிக்கா தமிழ்
எந்திரன் லதா தமிழ்
2011 காஞ்சனா ராகவனின் அண்ணி தமிழ்
மகான் கணக்கு சானகி தமிழ்
2012 சகுனி தமிழ்
ஈகா தெலுங்கு
நான் ஈ தமிழ்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா மாமி தமிழ்
கருப்பம்பட்டி சிவகாமி தமிழ்
தீயா வேலை செய்யனும் குமாரு குமாரின் சகோதரியாக தமிழ்
சம்திங் சம்திங் தெலுங்கு
தில்லு முல்லு வங்கி அலுவலர் தமிழ்
யா யா ஐஸ்வர்யா தமிழ்
கோலாகலம் தமிழ்
நவீன சரஸ்வதி சபதம் பார்வதி தமிழ்
2014 வீரம் தமிழ்
தெனாலிராமன்[2] தமிழ்
அம்மா அம்மம்மா தமிழ்
வாலிப ராஜா தமிழ்
நம்பியார் தமிழ்
காதல் 2 கல்யாணம் தமிழ்
2016 சாகசம் தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  1. மர்மதேசம்
  2. சிதம்பர ரகசியம்
  3. ரமணியும் ரமணி 2 ம்
  4. அண்ணாமலை
  5. கோலங்கள்
  6. பெண்
  7. சின்னப் பாப்பா பெரியப் பாப்பா
  8. எத்தனை மனிதர்கள்
  9. கனவுகள் இலவசம்
  10. பெண்மனம்
  11. உறவுகள் ஒரு தொடர்கதை
  12. கண்ணாடிக் கதவுகள்
  13. அது மட்டும் ரகசியம்
  14. லட்சுமி
  15. அஞ்சலி
  16. சொல்லத்தான் நினைக்கிறேன்
  17. இதயம்
  18. அத்திப் பூக்கள்
  19. பூவிலங்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2004-07-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://chennaionline.com/movies/cine-buzz/20141912041912/Shoot-over-for-Thenaliraman.col

3. https://cinema.vikatan.com/tamil-cinema/news/96800-cinema-career-of-actress-devadharshini--kodambakkam-thedi-series-part-15.html - Vignesh C Selvaraj - Vikatan,com

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதர்சினி&oldid=3559432" இருந்து மீள்விக்கப்பட்டது