சேத்தன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேத்தன்
பிறப்பு30 செப்டம்பர் 1970 (1970-09-30) (அகவை 50)[1]
தேசியம்தமிழர்
பணிநடிகர்
தொலைக்காட்சிமர்மதேசம் (தொலைக்காட்சி தொடர்),
மெட்டி ஒலி
வாழ்க்கைத்
துணை
தேவதர்சினி

சேத்தன் என்பவர் தமிழ் நடிகரும், திரைப்பட நடிகருமாவார். இவர் தேவதர்சினி என்ற திரைப்பட நடிகையைத் திருமணம் செய்து கொண்டார்.

மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார்.[2][3]

ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.[4]

தொழில்[தொகு]

மர்மதேசம் தொடரில் விடாது கருப்பு பகுதியில் நாட்டார் தெய்வமான கருப்புசாமியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். அது சேத்தனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.[5] அதன்பிறகு மர்மதேசத்தின் இயந்திரப் பறவை தொடரில் ஆசானின் மகனாக நடித்தார்.

தொலைக்காட்சி தொடரில் நடித்த சகநடிகையான தேவதர்சினியை மணந்தார். இத்தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது.

தொலைக்காட்சி[தொகு]

  1. மர்மதேசம் (தொலைக்காட்சி தொடர்)
  2. திருமகள்
  3. உதிரிப்பூக்கள்

திரைப்படங்கள்[தொகு]

  1. பொல்லாதவன் (2007)
  2. தாம் தூம் (2008)
  3. படிக்காதவன் (2009 திரைப்படம்) (2009)
  4. ராஜாதி ராஜா (2009)

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்தன்_(நடிகர்)&oldid=2719980" இருந்து மீள்விக்கப்பட்டது