நான் சிரித்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் சிரித்தால்
இயக்கம்ராணா
தயாரிப்புசுந்தர் சி.
கதைராணா
கதைசொல்லிராணா
இசைஹிப்ஹாப் தமிழா
நடிப்புஹிப்ஹாப் தமிழா
ஐஸ்வர்யா மேனன்
கே. எஸ். ரவிக்குமார்
மரியா ஜுலியானா
ஒளிப்பதிவுவாஞ்சிநாதன்
படத்தொகுப்புஸ்ரீஜித் சாரங்
கலையகம்அவினி சினிமேக்ஸ்
விநியோகம்ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுபெப்ரவரி 14, 2020 (2020-02-14)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் சிரித்தால் (Naan Sirithal) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை அறிமுக இயக்குநர் ராணா எழுதி இயக்கியுள்ளார்.[1][2] மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் சி. ஆதியின் மூன்றாவது படத்தை தயாரித்தார். இது மூன்றாவது தொடர் வெற்றியையும் ஈட்டியது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க, கே. எஸ். ரவிக்குமார் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். படவா கோபி மற்றும் எரும சாணி விஜய் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது ராணாவின் குறும்படமான கெக்க பெக்க கெக்க பெக்கவின் திரைப்படப் பதிப்பாகும்.[3] படம் 2020 பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[4]

கதைச் சுருக்கம்[தொகு]

நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட காந்தி (ஹிப்ஹாப் தமிழா) எந்த வகையான உணர்ச்சி என்றாலும் சிரித்துவிடுவார். இதனால் தன் காதல், வேலை போன்றவற்றை இழக்கிறார். இதனால் காந்தியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து எப்படி காந்தி தப்பினான் என்பதே கதை

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2019 சூலையில் தொடங்கி, 2019 திசம்பர் 4 வரை நீடித்தது.[5] இப்படத்தின் வழியாக ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் சுந்தர் சி. ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்தனர்.

இசை[தொகு]

இப்படத்திற்கான பாடல் வரிகளை ஹிப்ஹாப் தமிழா, கபிலன் வைரமுத்து, அறிவு ஆகியோர் எழுதினர். பாடல் இசை, பின்னணி இசை ஆகியவற்றை ஹிப்ஹாப் தமிழா அமைத்தார். படத்தின் முதல் தனிப்பாடலான "பிரேக் அப் பாடல்" 2019 திசம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது.[6] இரண்டாவது ஒற்றை பாடல் "தோம் தோம்" 2019 திசம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது. மூன்றாவது ஒற்றை பாடல் "அஜக்கு குமுக்கு" 2020 சனவரி 11 அன்று வெளியிடப்பட்டது. நான்காவது தனிப்பாடல் "ஹேப்பி பர்த்டே" 2020 சனவரி 25 அன்று வெளியிடப்பட்டது.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பிரேக்கப் பாடல்"  ஹிப்ஹாப் தமிழா 2:49
2. "தூம் தூம்"  ஹிப்ஹாப் தமிழா], சஞ்சித் எக்டே 3:01
3. "அஜக்கு குமுக்கு"  ஹிப்ஹாப் தமிழா 3:25
4. "ஹேப்பி பர்த்டே"  திவாகர், கா கா பாலச்சந்தர் 3:06
5. "கெக்க பெக்க"  ஹிப்ஹாப் தமிழா, ராஜன் செல்லையா 3:14
6. "நான் சிரிச்சா"  கௌசிக் கிரிஷ், கானா வினோத் 1:51
மொத்த நீளம்:
17:26

வெளியீடு[தொகு]

இப்படம் 2020 பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[7]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Music composer-turned-actor Adhithya's next film titled Naan Sirithaal, see first look poster here - Times of India". The Times of India.
  2. "Hip Hop Aadhi dubs for 'Naan Sirithal' - Times of India". The Times of India.
  3. "NaanSirithal is closed to my heart Director Raana". Thirdeye Cinemas. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
  4. "Hiphop Tamizha's tweet about his next movie Naan Sirithaal". Twitter/HiphopTamizha (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
  5. "Shooting of Hip-hop Aadhi's Naan Sirithal completed - Times of India". The Times of India.
  6. Subramanian, Anupama (10 December 2019). "Hip Hop Aadhi launches break up song". Deccan Chronicle.
  7. "Hiphop Tamizha's tweet for trailer & release date of Naan Sirithal". Twitter/HiphopTamizha (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_சிரித்தால்&oldid=3660323" இலிருந்து மீள்விக்கப்பட்டது