ஜானகிராமன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜானகிராமன்
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புமலர் கே. பாலு
கே. தண்டபாணி
கதைகே. செல்வபாரதி (உரையாடல்)
திரைக்கதைசுந்தர் சி.
இசைசிற்பி
நடிப்புசரத்குமார்
நக்மா
ரம்பா
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்மலர் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 31, 1997 (1997-10-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜானகிராமன் (Janakiraman) என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், நக்மா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அதே நேரத்தில் ரம்பா , கவுண்டமணி, மணிவண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1997 தீபாவளிக்கு வெளியாகி, வணிக ரீதியிலும் வெற்றி பெற்றது.

கதை[தொகு]

ஜானகிராமன் (சரத்குமார்) மற்றும் அவரது சகோதரர் (கவுண்டமணி) ஆர். சுந்தர்ராஜனின் மருமகன்களாவர். சுந்தர்ராஜன் ஒரு அனுமன் பக்தர். அவர் தன் மருமகன் இருவரையும் பெண்களுடன் பழக விடாமல் பிரம்மசாரியாகவே வாழ பழக்கியுள்ளார்.

இதற்கிடையில், மற்றொரு மாமாவான மணிவண்ணன், தன் இரண்டு மகள்களையும் இரு சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். எனவே சுந்தர்ராஜன் ஊரில் இல்லாத நேரம்பார்த்து, மணிவண்ணன் அனுமான் வேடம் அணிந்து ஜானகிராமனின் படுக்கையறைக்கு வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அவர் சொல்லும் வண்ணத்தின் ஆடை அணிந்து பெண் அனுமன் கோவிலுக்கு வருவாள். அவளே அவனுக்கு ஏற்றவள் என்றும் அவர் கூறுகிறார்.

மணி பின்னர் தனது மகள்களை அவர் கூறிய நிறத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்விக்கிறார். ஆனால் ஜானகிராமன் குழப்பம் அடைந்து ரவிக்கையின் வண்ண கலவையை மாற்றி அதற்கு பதிலாக கோயிலில் இந்துவை (நக்மா) சந்திக்கிறார்.

இந்து தன் அக்காள்களுடன் மகிழ்ச்சியாக இல்லை, ஏனென்றால் அக்காள் கணவர்கள் (ஆனந்தராஜ் மற்றும் பொன்னம்பலம்) அவளுடைய சொத்தை அபகரிக்க அவளை இரண்டாந்தாரமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். அதனால் ஜானகிராமனை இந்துவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறார்கள். திருமண நாளில் ஆனந்தராஜ் வேறு ஒரு பெண்ணை இந்துவுக்கு மாற்றாக மணப்பெண்ணாக ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையில், மணி தன் மகளில் ஒருவரை ஆளாமாறாட்ம் செய்து (ஆனந்தராஜின் அதே யோசனையுடன்) ஜானகிராமனுக்கு திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்கிறார். ஜானகிராமனுக்கும் இந்துவுக்கும் நடக்கும் திருமணம் நடக்கும் மண்டபத்தில். நான்கு பெண்களும் (இந்து, மணியின் இரண்டு மகள்கள் மற்றும் ஆனந்த்ராஜ் ஏற்பாடு செய்த மணமகள்) ஒரே மாதிரியான புடவைகளை அணிகிறார்கள். முகத்தை தொங்கும் பூக்களால் மறைக்கப்பட்டிருக்கும். பல குழப்பங்களையும் மீறி எப்படியோ ஜானகிராமனும் இந்துவும் மணமேடையில் ஒன்றாக அமர்கிறார்கள் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்; இதனால் மணிவண்ணனும் ஆனந்தராஜும் ஏமாற்றமடைகின்றனர்.

காயத்திரி (ரம்பா) என்ற பெண் வந்து ஜானகிராமனின் முதல் மனைவி என்று கூறி ஜானகிராமன் மற்றும் இந்துவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். இந்து அதை உண்மை என்று நம்புகிறாள். பல குழப்பங்களுக்குப் பிறகு, காயத்திரி தனது செயலுக்கான உண்மையான காரணத்தை விவரிக்கிறாள்.

குழந்தை பருவத்தில், அவளுடைய தாய் பணத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முதுமையில் அவள் நோய்வாய்ப்பட்டு வருந்துகிறாள். தனது தாயை குணப்படுத்த, ஜானகிராமனின் மனைவியாக நடித்து ஜானகியின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்த ஆனந்தராஜ் சொன்னதை அவள் செய்ய வேண்டும். இறுதிகட்டத்தில், இந்துவும் காயத்ரியும் எதிரிகளால் கடத்தப்பட்டு ஜானகியால் காப்பாற்றப்படுகிறார்கள்.

காயத்ரியின் தாய் உடல்நிலை குணமானதைத் தொடர்ந்து அவள் அந்த இடத்தை விட்டு செல்கிறாள். அதுவரை பிரம்மச்சாரியாக இருந்த சுந்தர்ராஜன் ஒரு மலையாளப் பெண்ணை மணந்து கொள்கிறார்.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

படத்தின் சில பகுதிகள் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் படமாக்கப்பட்டன. படத்தின் தயாரிப்பின் போது, சரத்குமாரும் நக்மாவும் ஒருவரை காதல் பாரவை பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.[1] மேலும், படத்தில் நடிக்கும் நக்மாவும் ரம்பா இருருக்குள்ளும் சங்கடங்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.[2][3]

இசை[தொகு]

இப்படத்திற்கு சிற்பிஇசையமைத்தார் .[4][5]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 "ஹவாலியா ஹவாலியா" சஞ்சீவ் அத்வானி, சௌம்யா ராவ் பழநிபாரதி
2 "ஹே சா சா காதலிச்சா" ஹரிஹரன், நிர்மலா
3 "காதல் சொல்ல வார்த்தை" ஹரிஹரன், சுஜாதா
4 "பொட்டு மேல பொட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம்
5 "ஏனாடி கண்ணே" மனோ, சுஜாதா, சிற்பி, ஜோசப்

வரவேற்பு[தொகு]

இந்தோலிங்க் தமிழ் எழுதிய விமர்சனத்தில் "இந்தப் படத்தில் நிறைய நகைச்சுவையும், வேகமான இசையும் உள்ளது. சுந்தர் சியும், சிற்பியும் சிறந்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களின் பணிக்கு அவர்கள் பாராட்டப்பட வேண்டும். " [6]

குறிப்புகள்[தொகு]

 

  1. http://chandrag.tripod.com/track123.html
  2. "A-Z (II)". Indolink Tamil. 28 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. Sandya. "Tamil Movie News". Indolink. 30 April 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Janaki Raman songs". JioSaavn. 2019-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-07-03 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Janaki Raman songs". Gaana. 2019-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-07-03 அன்று பார்க்கப்பட்டது.
  6. "JanakiRaman". Indolink. 15 October 1997. 1 April 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 October 2011 அன்று பார்க்கப்பட்டது.