ரஞ்சித் (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஞ்சித்
Singer Ranjith.JPG
சங்கர்ஷ் இசை நிகழ்ச்சியில் ரஞ்சித்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரஞ்சித் கே. கோவிந்த்
பிறப்பு21 பெப்ரவரி 1977 (1977-02-21) (அகவை 44)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பிறப்பிடம்கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர், இசை அமைப்பாளர்
இசைத்துறையில்2002முதல் தற்போது வரை
இணையதளம்www.ranjithgovind.com

கே. ஜி. ரஞ்சித்,(Ranjith (Singer)) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் பணிபுரிந்த இந்திய பின்னணிப் பாடகர் ஆவார்.[2][3]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ரஞ்சித் இந்தியாவிலுள்ள, சென்னையில், ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.[4] அவர் பல்வேறு வகையான இசைகளைக் கேட்டு வளர்ந்தார். பல கேரள மக்கள் இருந்த இடத்தில் அவர் தங்கியிருந்ததால், அவருக்கு, உள்ளூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு, ஒரு குடும்ப நண்பரின் வழிகாட்டுதலில், அவர் ஹிந்துஸ்தானி இசை மற்றும் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். வித்வான் கடலூர் சுப்பிரமணியன், கே.எஸ் கனகசிங்கம், திருச்சூர் பி. ராமன்குட்டி மற்றும் பி. எஸ். நாராயண சுவாமி ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.[5] அவர் 2001 ஆம் ஆண்டில் சன் டிவி "சப்த ஸ்வரங்கள்" பாடல் போட்டியில் பங்கு பெற்று வென்றதினால் பிரபலமடைந்தார்.[5] இவர் பயிற்சி பெற்ற பரத நாட்டிய நடனக் கலைஞரான ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியா என்ற மகள் உள்ளார்.

தொழில்[தொகு]

மணிசர்மா, 'பாபி' (2002) என்கிற தெலுங்கு படத்திற்காக ,"அடுகு அடுகு" என்ற பாடலைப் பாட ரஞ்சித்திற்கு வாய்ப்பளித்தார். இப்பாடலை, இவர், திறமையான பாடகரான ஹரிஹரனுடன் . இணைந்து பாடியுள்ளார். இதன் மூலமாக பின்னணிப் பாடகராக ரஞ்சித் அறிமுகப்படுத்தப்பட்டார். ரஞ்சித் அவர்களின் முதல் தமிழ் பாடலானது, ஆசை ஆசையாய் (2002) திரைப்படத்தில் வருகின்ற "ஹே பெண்ணே" என்பதாகும். மேலும், இந்தப் பாடலுக்கும் மணிசர்மா இசையமைத்திருந்தார்.[5] இருப்பினும், ரஞ்சித்திற்கு புகழைப் பெற்றுத் தந்த "சப்போஸ்" என்று தொடங்கும் பாடல் சுக்ரன் (2005) திரைப்படத்தில் இடம்பெற்றது. 2007 ஆம் ஆண்டில் அவர் தனது தாய்மொழியான மலையாளத்தில், முதல் பாடலான "இன்னொரு பாட்டொன்னு பாடான்" என்கிற பாடலை "கிலுக்கம் கிலுகிலுக்க்கம்" திரைப்படத்திற்காக பாடினார்.[5] ரஞ்சித், 2009இல் வெளியான "கம்யம்" தெலுங்குப் படத்தில் பாடிய "எந்தவரகு" பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தெலுங்குப் பிரிவில், 56வது தென்னிந்திய பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

2005 ஆம் ஆண்டில், ரஞ்சித், ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகங்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இது, சரணம் ஐயப்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.[6] அவர் மேலும், பஞ்சமுகி என்கிற நடனக் குழுவிற்கு இசையமைத்தார்.[7] இவர், யுவன் ஷங்கர் ராஜா , வித்யாசாகர் மற்றும் பிற இசை இயக்குனர்களுடன் இணைந்து தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_(பாடகர்)&oldid=3298572" இருந்து மீள்விக்கப்பட்டது