உள்ளடக்கத்துக்குச் செல்

பெசன்ட் ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெசன்ட் ரவி
பிறப்புஆர். ரவிக்குமார்
1 சூன் 1970 (1970-06-01) (அகவை 54)[1]
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
தேசியம்இந்தியர்
பணிநடிகர், சண்டைக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்பொது வரை
வாழ்க்கைத்
துணை
ஆர். பிரபாவதி
பிள்ளைகள்ஆர்பி. சுவேதாசிறீ (மகள்)
ஆர்பி. பிரணவ் (மகன்)

பெசன்ட் ரவி (Besant Ravi) என்று அழைக்கப்படும் ஆர். ரவிக்குமார் (பிறப்பு 1 சூன் 1970), என்பவர் ஓர் இந்திய நடிகர் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், இந்தி மற்றும் பல இந்திய மொழி படங்களில் எதிர்மறையான துணை வேடங்களில் நடித்துள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சென்னையில் பிறந்து வளர்ந்த பெசன்ட் ரவி, தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் இருசக்கர வாகன பழுதுபார்ப்பவராக இருந்தார். இவரது குழந்தைப் பருவ காலத்தில், பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டின் அருகே திரைப்பட படப்பிடிப்புகளைப் பார்த்து வளர்ந்தார். அப்போது இவர் விரைவில் படப்பிடிப்பு குழுவில் உள்ள கலைஞர்களுடனும், தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் பழகினார். பெசன்ட் ரவி கலப்பு தற்காப்பு கலை மற்றும் குத்துச்சண்டையில் நிபுணர். இவருக்கு லக்கி மேன் படத்தின் மூலமாக பிரபலம் கிடைத்தது.[2][3]

தொழில்

[தொகு]

லக்கி மேன் திரைப்படத்தில் நடித்த இவர் இப்படதிம் மூலமாக கவனிக்கத்தகவராக ஆனார். அதில் இவர் ஒரு தனியாளாக சண்டைக் காட்சியில் நடித்தார். பின்னர் சண்டைக் காட்சி வடிவமைப்பாளர் பாண்டியனிடம் திரைப்படத்துறைக்கு தொழில் ரீதியாக பயிற்சி பெற்றார். இவர் படங்களில் சண்டைக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பல அதிரடி காட்சிகளில் நடித்தார். பின்னர், இவர் நடிப்புத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகளைப் பெற்று, நடிப்பில் பரப்பபான நபராக ஆனார். இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படமானது இவரது படங்களில் பேசப்படும் படமாக ஆனது.[2]

திரைப்படவியல்

[தொகு]

தமிழ்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.nadigarsangam.org/member/r-ravikumar-a-k-a-besant-ravi/
  2. 2.0 2.1 2.2 "Tamil Movie Actor Besant Nagar Ravi - Nettv4u". nettv4u.
  3. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசன்ட்_ரவி&oldid=3944586" இலிருந்து மீள்விக்கப்பட்டது