பைரவா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரவா
இயக்கம்பரதன்
தயாரிப்புவிஜயா புரொடக்சன்சு
கதைபரதன்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புவிஜய்
கீர்த்தி சுரேஷ்
ஜெகபதி பாபு
சதீஸ்
ஒளிப்பதிவுஎம். சுகுமார்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்விஜயா புரொடக்சன்சு
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு50 காேடி
மொத்த வருவாய்100 காேடி

பைரவா (Bairavaa) விஜய் நடிப்பில் 2017 சனவரியில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடித் திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். விஜயா புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சதீஸ், ஜெகபதி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது நடிகர் விஜய் நடிக்கும் 60ஆவது படமாதலால் முன்னதாக விஜய் 60 என்று அறியப்பட்டு, பின்னர் 2016 செப்டம்பரில் “பைரவா” எனப் பெயரிடப்பட்டது.[1] இப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை சுமார் 100 கோடி வரை வியாபாரம் செய்தனர்.

நடிகர்கள்[தொகு]

விநியோகம்[தொகு]

நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தின் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமையை 22 கோடி (US$2.8 மில்லியன்) அளவிற்கு வாங்கியுள்ளார். இத்தொகையானது விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான தெறி திரைப்படத்தை விட மிக அதிகமாகும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhairava First look Poster". Archived from the original on 2016-09-05. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  2. "IndiaGlitz - Ilayathalapathy Vijay Keerthi Suresh Vijay 60 overseas rights bought by Arunpandian - Tamil Movie News". பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
  3. "IndiaGlitz - Illayathalapathy Keerthi Suresh Vijay 60 sold for record price in overseas market - Tamil Movie News".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரவா_(திரைப்படம்)&oldid=3906712" இலிருந்து மீள்விக்கப்பட்டது