விஜயா வாகினி ஸ்டுடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயா வாகினி ஸ்டுடியோஸ்
நிறுவுகை1948; 74 ஆண்டுகளுக்கு முன்னர் (1948)
நிறுவனர்(கள்)மூலா நாராயண சுவாமி, பி. என். ரெட்டி,
செயலற்றதுஅண். 1980s
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முக்கிய நபர்கள்பி. என். ரெட்டி, அலூரி சக்ரபாணி
தொழில்துறைதிரைப்படம்
அரங்கத்தின் பழைய படம், 1952கள்
வாகினி பிக்சர்ஸின் விளம்பரம், சந்தமாமா இதழ், 1948.

விஜயா வாகினி ஸ்டுடியோஸ் (Vijaya Vauhini Studios) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையிருந்த முதன்மையான திரைப்படப் படப்பிடிப்பு அரங்கங்களில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

வாகினி ஸ்டுடியோஸ் மற்றும் விஜயா புரொடக்சன்ஸ் ஆகிய இரண்டும் இணைந்ததன் விளைவாக ஆசியாவின்] மிகப்பெரிய திரைப்பட அரங்கமாக கருதப்பட்டது. 1948 ஆம் ஆண்டில், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் மூலா நாராயண சுவாமியின் சொத்துக்களும் வணிகங்களும் வருமான வரி சிக்கல்களால் பறிமுதல் செய்யப்பட்டன.[1][2][3][4] தான் நடத்தி வந்த வாகினி ஸ்டுடியோவை வருமான வரித் துறையிலிருந்து காப்பாற்ற விஜயா புரொடக்சன்ஸ் அதிபர் பி. என்.ரெட்டிக்கு குத்தகைக்கு விட்டார். நாகிரெட்டி இதை தான் நடத்தி வந்த விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைத்து "விஜயா-வாகினி ஸ்டுடியோஸ்" என்ற பெயரில் ஒரு படப்பிடிப்பு அரங்கமாக மாற்றினார். [5]

நாகி ரெட்டிக்கு வாகினி ஸ்டுடியோவின் விற்பனை

தயாரிப்புகள்[தொகு]

பாதாள பைரவி, பெல்லி சேசி சூடு ( பிறகு தமிழில் கல்யாணம் பண்ணிப்பார் என எடுக்கப்பட்டது), சந்திராஹாரம், மாயா பஜார் போன்ற சில படங்கள் தயாரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டன. தெலுங்கில் என். டி. ராமராவ் நடித்த "மிசம்மா" என்ற படம் தமிழில் ஜெமினி கணேசன் நடிக்கமிஸ்ஸியம்மா (1955) என எடுக்கப்பட்டது. "சந்திராஹரம்", "உமா சாந்தி கௌரி சங்கருலா கதா" ஆகிய படங்களைத் தவிர, விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்த ஒவ்வொரு படமும் ஒரு நல்ல வெற்றி பெற்றது.

தற்போது[தொகு]

தற்போது, அரங்கம் இருந்த இடங்களில் விஜயா மருத்துவமனையும், விஜய சேச மகால் திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The story in a road name - CHEN". The Hindu. 2009-12-07. 2016-05-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Narayana Swamy Moola
  3. "Telugu Cinema - Research - "Telugu Cinema - past and the present" by Gudipoodi Srihari". Idlebrain.com. 2016-05-30 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Bhatktha Potana (1943) - Anantapur". The Hindu. 2011-12-11. 2016-05-30 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2004-09-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-31 அன்று பார்க்கப்பட்டது.
The Hindu

வெளி இணைப்புகள்[தொகு]