பரதன் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரதன்
பிறப்புBharathan
செயற்பாட்டுக்
காலம்
2001 – தற்போது

பரதன் (Bharathan) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். திரைப்பட இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்ததிலிருந்து இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. இவர், 2001 இல் வெளிவந்த விக்ரமின் தில் மற்றும் தரணி இயக்கிய விஜயின் கில்லி, மதுர ஆகியவற்றுக்கும் இயக்குநர் சிவா இயக்கிய அஜித்தின் வீரம் திரைப்படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.[1][2] விஜயின் நடிப்பில் பரதன் முதலாவதாக இயக்கிய அழகிய தமிழ்மகன் திரைப்படம் வருவாயில் குறைந்த அளவையே பெற்றுக் கொண்டது.[3] இவரது இரண்டாம் திரைப்படமான அத்தி சராசரியான வருவாயைப் பெற்றுக்கொண்டது.[4]விஜயின் அறுபதாவது திரைப்படமான பைரவாவினை இவர் இயக்குகின்றார்.[5]

திரைப்படப்பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் செயல் மொழி குறிப்பு மேற்கோள்
2001 தில் எழுதுநர் தமிழ் வசனம் [6]
2001 தூள் எழுதுநர் தமிழ் வசனம்
2004 கில்லி எழுதுநர் தமிழ் வசனம் [7]
2004 மதுர எழுதுநர் தமிழ் வசனம் [8]
2007 அழகிய தமிழ்மகன் இயக்குநர், எழுதுநர் தமிழ் [3]
2011 ஒஸ்தி எழுதுநர் தமிழ் வசனம்
2014 வீரம் எழுதுநர் தமிழ் வசனம் [9]
2014 அத்தி இயக்குநர், எழுதுநர் தமிழ்

[4]

2017 பைரவா இயக்குநர், எழுதுநர் தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.behindwoods.com/தமிழ்-movie-news/apr-07-03/20-04-07-vijay.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://behindwoods.com/தமிழ்-movies-cinema-news-15/vijays-60th-film-will-be-directed-by-bharathan.html[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 http://www.behindwoods.com/தமிழ்-movie-news/nov-07-02/13-11-07-diwali.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 http://www.deccanchronicle.com/140628/entertainment-movie-review/article/movie-reivew-athithi-has-its-thrilling-moments
  5. http://www.ibtimes.co.in/vijay-60-aka-thalapathy-60-title-first-look-posters-be-released-monday-photos-692367
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-04-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-01 அன்று பார்க்கப்பட்டது.
  7. http://www.thehindu.com/thehindu/fr/2004/12/31/stories/2004123101620100.htm
  8. http://www.indiaglitz.com/box-office-report-தமிழ்-news-10472.html
  9. http://www.kollyinsider.com/2014/01/jilla-vs-veeram-10-days-box-office.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதன்_(இயக்குநர்)&oldid=3561942" இருந்து மீள்விக்கப்பட்டது