உள்ளடக்கத்துக்குச் செல்

தலைநகரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைநகரம்
இயக்கம்சுராஜ்
தயாரிப்புரவிச்சந்திரன்
கதைசுராஜ்
மூலக்கதைஅபிமன்யு (மலையாளத் திரைப்படம்)
படைத்தவர் பிரியதர்சன்
இசைடி. இமான்
நடிப்புசுந்தர் சி.
ஜோதிமயி
வடிவேலு
பிரகாஷ் ராஜ்
போஸ் வெங்கட்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புமு. காசி விஸ்வநாதன்
கலையகம்ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்
விநியோகம்ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்
வெளியீடு19 மே 2006
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைநகரம் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி., ஜோதிமயி மற்றும் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இது வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம். இப்படம் பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான அபிமன்யுவின் மறுஆக்கம் ஆகும்.[1] இத்திரைப்படம் கன்னடத்தில் தேவ்ரு என்று மறுஆக்கம் செய்யப்பட்டது.[2]

கதைச்சுருக்கம்

[தொகு]

சென்னையில் தாதாவான காசிம் பாய் (ஜூடோ கே. கே. ரத்னம்) மற்றும் ரவுடி ரைட் என்ற சுப்ரமணியன் (சுந்தர் சி.) இருவருக்கும் நடக்கும் பிரச்னையில் ரைட்டின் நண்பன் பாலு (போஸ் வெங்கட்) கொல்லப்படுகிறான். இதனால் வன்முறையைக் கைவிட்டு ஒழுங்காக வாழ முடிவெடுக்கிறான் ரைட். அவனைக் காதலிப்பவள் திவ்யா (ஜோதிமயி). தன் ஊரிலிருந்து நடிகை திரிசாவைத் திருமணம் செய்யும் லட்சியத்தோடு சென்னை வரும் நாய் சேகர் (வடிவேலு) திவ்யாவைக் காதலிப்பதாக சொல்லி அவர்களுடன் தங்குகிறான். புதிதாக பணிமாற்றம் பெற்றுவரும் காவல் ஆய்வாளர் (பிரகாஷ் ராஜ்) திருந்தி வாழும் ரைட்டை மீண்டும் ரவுடியாக மாற்ற முயல்கிறார். ரைட் மீண்டும் ரவுடியாக மாறினானா? காசிம் பாய் - ரைட் மோதல் என்னவானது? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

[தொகு]

பட வசூல்

[தொகு]

இப்படம் ரூ. 4 முதல் 5 கோடி வசூல் செய்தது.[3]

வடிவேலுவின் வசனங்கள்

[தொகு]

இப்படத்தில் வடிவேலு பேசிய நகைச்சுவை வசனமான த்ரிஷா இல்லன்னா திவ்யா என்பது 2005 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் தலைப்பிற்குக் காரணமாக அமைந்தது[4].

வடிவேலுவின் மற்றொரு வசனமான நானும் ரவுடிதான் என்பதும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பெயராக அமைந்தது.[5][6]

ஏய்! என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலயே! என்ற வடிவேலுவின் நகைச்சுவை வசனமும் புகழ்பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அபிமன்யுவின் மறுஆக்கம்".
  2. "கன்னட மறுஆக்கம் தேவ்ரு".
  3. "பட வசூல்". Archived from the original on 2007-12-08. Retrieved 2019-02-21.
  4. "த்ரிஷா இல்லனா நயன்தாரா".
  5. "நானும் ரௌடிதான்".
  6. "படத்தலைப்புகளான வடிவேலு வசனங்கள்".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைநகரம்_(திரைப்படம்)&oldid=4121873" இலிருந்து மீள்விக்கப்பட்டது