இங்கிலீசுக்காரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இங்கிலீீஷ்காரன்
இயக்குனர் சக்தி சிதம்பரம்
தயாரிப்பாளர் அமுதா துரைராஜ்
நடிப்பு சத்யராஜ்
மதுமிதா
நமிதா
வடிவேலு
சந்தானம்
இசையமைப்பு தேவா
ஒளிப்பதிவு சுரேஷ் தேவன்
வெளியீடு சூன் 24, 2005 (2005-06-24)
நாடு  இந்தியா
மொழி தமிழ்

இங்கிலீஷ்காரன் என்பது 2005ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், வடிவேலு, நமிதா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை அமுதா துரைராஜ் தயாரித்திருந்தார். இப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரமும், சத்யராஜும் ஏற்கனவே இணைந்த மகா நடிகன், என்னம்மா கண்ணு திரைப்படங்கள் வெற்றித் திரைப்படங்களாக அமைந்ததால் இவர்கள் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.