லக்கி மேன்
லக்கி மேன் | |
---|---|
இயக்கம் | பிரதாப் போத்தன் |
தயாரிப்பு | கே. பிரசாந்த் |
கதை | இராஜகோபாலன் (உரையாடல்) |
திரைக்கதை | பிரதாப் போத்தன் |
இசை | ஆதித்தியன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அரவிந்த் கமலநாதன் |
படத்தொகுப்பு | |
கலையகம் | பிரசாந்த் ஆர்ட் பிலிம்ஸ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லக்கி மேன் (Lucky Man) என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் கற்பனை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். பிரதாப் போத்தன் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சங்கவி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மஞ்சுளா விஜயகுமார், ராதாரவி, வினு சக்ரவர்த்தி, தியாகு ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்ய ஆதித்தியன் இசையமைத்தார். இப்படம் 14 ஏப்ரல் 1995 அன்று வெளியிடப்பட்டது. இது 1994 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான யமலீலாவின் மறு ஆக்கம் ஆகும். [1]
கதை[தொகு]
யமனின் பிரம்மச் சுவடி என்ற புத்தகமானது தற்செயலாக வானத்திலிருந்து பூமியில் விழுந்துவிடுகிறது. இந்த புத்தகத்தில்தான் மனிதனின் ஆயுள் எப்போது முடிகிறது அவன் உயிரை எப்போது எடுக்கவேண்டும் என்ற விவரங்கள் உள்ளன. இதைப் பார்த்துதான் எமனால் ஒரு உயிரை எடுக்க முடியும். ஒரு மாதத்திற்குள் புத்தகத்தைக் கண்டுபிடிக்க பிரம்மதேவர் யமனுக்கு கட்டளையிடுகிறார். புத்தகத்தை மனிதர்கள் பார்த்தால் அதனால் குழப்பம் ஏற்படும் என்று யமனின் கணக்குபிள்ளையான சித்ரகுப்தன் அஞ்சுகிறார். இருப்பினும், புத்தகத்தைப் பார்க்கும் நபரின் விவரங்கள் மட்டுமே புத்தகத்தில் தெரியும் என்று யமன் அவருக்கு உறுதியளிக்கிறார். கோபி என்ற இளைஞனின் கையில் அந்த புத்தகம் கிடைக்கிறது. புத்தகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் லாட்டரியின் முடிவை அவர்கள் முன்பே அறிந்துகொள்வதால் அவர்கள் பணக்காரர்களாகிறார்கள். கோபி புத்தகத்தைப் பயன்படுத்தி பணக்காரர் ஆகிறான். இதற்கிடையில், யமனும் சித்ரகுப்தனும் பூமிக்கு வந்து புத்தகத்தைத் தேடுகிறார்கள். பூமியில் உள்ள தற்போதைய நாகரிகத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் பல வேடிக்கைகள் ஏற்படுகின்றன. கோபியின் எதிரியான சிவராமன் கோபியின் வெற்றிக்கான ரகசியத்தை அறிய விரும்புகிறான். அதன்பிறகு கோபியிடமிருந்து புத்தகத்தை திருட திட்டமிட்டுகிறான். ஒரு நாள், கோபி தனது தாயார் இறப்பது குறித்து அந்த புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்கிறான். இப்போது, கோபி தனது தாயைக் காப்பாற்றி தனது காதலையும் வெல்ல விரும்புகிறான். அவன் இதில் வெற்றி பெறுகின்றானா இல்லையா, யமன் புத்தகத்தைக் கண்டுபிடித்தாரா என்பது மீதிக் கதை.
நடிகர்கள்[தொகு]
- கார்த்திக் கோபியாக[1]
- கவுண்டமணி யமனாக [2]
- செந்தில் சித்திரகுப்தனாக
- சங்கவி கோபியின் காதலியாக
- மஞ்சுளா விஜயகுமார் கோபியின் தாயாக
- ராதாரவி "சீட்டிங்" சிவராமனாக [3]
- வினு சக்ரவர்த்தி இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமாராக
- தியாகு கோபியின் நண்பராக
- ஜெயமணி காவலராக
- சில்க் ஸ்மிதா ஜில்லுவாக
- பெசன்ட் ரவி
- விஜயகுமார் விருந்தினர் தோற்றத்தில்
இசை[தொகு]
இப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்தார். பாடல் வரிகளை பிறைசூடன் எழுதினார். [4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அம்மா 1000" | ஆதித்தயன், மனோ | ||||||||
2. | "அக்கும் பக்கும்" | சுரேஷ் பீட்டர்ஸ், சுஜாதா | ||||||||
3. | "அம்மம்மா ஆனந்தம்" | ஆதித்யன், சித்ரா | ||||||||
4. | "எம தர்மராஜா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | ||||||||
5. | "பலான பார்ட்டி" | ஆதித்யன், சங்கீதா-சங்கீத சஜித் | ||||||||
6. | "யார் செய்த மாயம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சங்கீதா-சங்கீத சஜித் |
வரவேற்பு[தொகு]
நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுதிய விமர்சனத்தில், " லக்கி மேன் ஒரு வித்தியாசமான கதையோடு உள்ளது. இது இனிமையான 2 1/2 மணிநேரத்துக்கு உதரவாதமான நகைச்சுவையைக் கொண்டுள்ளது ". [1] படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. [5]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Vijiyin, K. (6 May 1995). "When the gods tangle with mortals". New Straits Times: p. 28. https://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19950506&printsec=frontpage&hl=en. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "ns" defined multiple times with different content பிழை காட்டு: Invalid<ref>
tag; name "ns" defined multiple times with different content - ↑ Mohan, Ashutosh (24 March 2020). "Top 10 Tamil Films Where Senthil Got The Better Of Goundamani". Film Companion. 25 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ T.K., Balaji. "Lucky Man". Indolink. 7 June 1997 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lucky Man". JioSaavn. 25 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sundaram, Nandhu (1 December 2020). "'Baasha' to 'Sathi Leelavathi': Why 1995 is an unforgettable year for Tamil cinema fans". The News Minute. 11 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- 1995 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் திரைப்படங்கள்
- ஆதித்தியன் இசையமைத்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்