பொன்னர் சங்கர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன்னர் சங்கர்
Release Poster
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புதியாகராஜன்
கதைகருணாநிதி
மூலக்கதைபொன்னர் சங்கர்(கருணாநிதி)
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுசாஜிகுமார்
படத்தொகுப்புடான் மேக்சு
கலையகம்லட்சுமி சாந்தி மூவிஸ்
வெளியீடுஏப்ரல் 9, 2011 (2011-04-09)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

பிரசாந்த் இரு வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் கதை அண்ணமார் சாமி கதை என்று கொங்கு வட்டாரத்தில் கூறப்படும் பொன்னர் சங்கர் எனும் இருவரின் கதையாகும். இதை கருணாநிதி நூலாக ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.[1]

கதை[தொகு]

பெரிய மலைக்கொழுந்து என்றவரின் புதல்வி தாமரை தன் மாமன் மகனான நெல்லையன் கொண்டான் என்பவனைக் காதலிக்கிறார். இடையில் மந்தியப்பனை தாமரையுடன் திருமணம் செய்து வைக்க முயன்று, அதற்கு தாமரை மறுக்கிறார். நெல்லையன் கொண்டான் ஏழை என்பதால் அவரை திருமணம் செய்த தாமரையை பெரிய மலைக்கொழுந்தும் அவரின் புதல்வரான சின்ன மலைக்கொழுந்தும் வீட்டில் சேர்க்க மறுக்கின்றனர். தாமரை வீட்டை விட்டு வெளியேறும் போது தன் தமையனான சின்ன மலைக்கொழுந்திடம் நீ நாளை என் ஆண் பிள்ளைகளை உன் பெண்பிள்ளைகளுக்கு மணம் முடிப்பதற்காக என் வீட்டின் வாசல் நாடி வருவாய் என்று சவால் விட்டுச் செல்கிறார். அதன்படி தாமரையின் மகன்களான பொன்னரும் சங்கரும் சின்ன மலைக்கொழுந்தின் மகள்களான முத்தாயி மற்றும் பவளாயியை திருமணம் செய்கின்றனர்.

இதன் காரணத்தால் பெரிய மலைக்கொழுந்துவும், முன்பகை காரணமாக மந்தியப்பனும் அவனின் நண்பனான காளி மன்னனும் பொன்னர் சங்கர் மீது போர் தொடுக்கின்றனர். இறுதியில் பொன்னரும் சங்கரும் வெற்றி அடைகின்றனர்.

பாத்திர அமைப்பு[தொகு]

பாத்திரம் நடிப்பு
பொன்னர் பிரசாந்த்
சங்கர் பிரசாந்த்
முத்தாயி பூஜா சோப்ரா
பவளாயி திவ்யா பரமேசுவரன்
பெரிய மலைக்கொழுந்து விஜயகுமார்
சின்ன மலைக்கொழுந்து பொன்வண்ணன்
மந்தியப்பன் பிரகாஷ் ராஜ்
காளி மன்னன் துரைசாமி நெப்போலியன்
தாமரை குஷ்பூ
நெல்லையங்கொண்டான் ஜெயராம் (நடிகர்)
அருக்காணி சினேகா

மேற்கோள்கள்[தொகு]