பெண் சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண் சிங்கம் (Pen Singam) பாலி ஸ்ரீரங்கம் இயக்கத்தில், 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மீரா ஜாஸ்மின், உதை கிரண், ரிச்சர்ட், விவேக், ராதாரவி நடித்துள்ளனர். கருணாநிதியின் "சுருளிமலை" புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.[1] எஸ். பி முருகேசன் தயாரிப்பில், தேவா இசையில், விஜய் ராகவ் ஒளிப்பதிவு செய்தார். கருணாநிதியின் 87 ஆவது பிறந்தநாளன்று (3 ஜூன் 2010) இப்படம் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

மீரா ஜாஸ்மின், உதை கிரண், ரிச்சர்ட், விவேக், ராதாரவி, சுதர்ஷனா சென், சுந்தர், ரோகினி, தலைவாசல் விஜய், மதன் பாப், மகேந்திரா, பெசன்ட் ரவி, வாகை சந்திரசேகர், ரிதேஷ், லாரன்ஸ், லட்சுமி ராய்.

கதைச்சுருக்கம்[தொகு]

சூர்யாவும் நாகேந்திரனும் நண்பர்கள். சிம்ம பெருமாளிடம் சூர்யாவிற்கு மோதல் ஏற்படுகிறது. வர தட்சணை பெறாமல் திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாகேந்திரனை, செல்வ செழிப்புள்ள மைதிலி விரும்புகிறாள். சூர்யாவும் அவனது தாயும் உதவி செய்ய, மைதிலியை மணக்கிறான் நாகேந்திரன். திருமணமான முதலிரவன்று, மைதிலியிடம் பணம் கேட்கும் நாகேந்திரனைக் கண்டு அதிர்ந்து போகிறாள் மைதிலி. பணம் தர மறுக்கும் மைதிலியை அச்சுறுத்துகிறான் நாகேந்திரன். தன் நண்பன் கொடியவன் என்று தெரியவர மனமுடைந்து போகிறான் சூர்யா. நாகேந்திரன் கொடுக்கும் விருந்திற்கு சிம்ம பெருமாள் வருகிறான். அதை தடுக்க முயலும் மைதிலி துப்பாக்கியால் கொல்லப்படுகிறாள். அப்பழி சூர்யா மீது விழுகிறது. சூர்யா எவ்வாறு அதிலிருந்து தப்பித்தான் என்பது தான் மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

வைரமுத்து, கலைஞர், பாரதிதாசன், பா. விஜய், வாலி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு தேவா இசை அமைத்தார். 6 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வெளியிட்டது.

பாடல் பட்டியல்[2][தொகு]

  1. பூ பூக்கும் சத்தம்
  2. ஆஹா வீணையில் எழுவது
  3. கல்யாணம் ஆகாத பெண்ணே
  4. சில் சில்லா சில் சில்லா
  5. நீ சொன்னால் தேய்பிறை
  6. அடி ஆடி அசையும்

தயாரிப்பு[தொகு]

இளவேனில் என்ற இயக்குனருடன் படம் துவணப்பட்டாலும், பின்னர் அறிமுக இயக்குனர் பாலி ஸ்ரீரங்கத்தின் இயக்கத்தில் படம் தயாரிக்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் முதல் முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[3] நீதிக்கு போராடும் பெண்ணை பற்றியக் கதையாகும்.[4]

வெளி-இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.indiaglitz.com". External link in |title= (உதவி)
  2. "https://www.youtube.com". External link in |title= (உதவி)
  3. "http://www.southdreamz.com". 2012-10-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-06 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
  4. "http://www.thehindu.com". External link in |title= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_சிங்கம்&oldid=3564766" இருந்து மீள்விக்கப்பட்டது