திரு ரங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரு ரங்கா
இயக்கம்ரவி பார்கவன்
தயாரிப்புஏ. செல்வி
சத்யநாராயணா
கதைரவி பார்கவன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புசந்தோஷ்
அங்கிதா
தேஜாஸ்ரீ
நாசர்
நிழல்கள் ரவி
குயிலி
மணிவண்ணன்
ரமேஷ் கண்ணா
ஒளிப்பதிவுவிசாகன்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்செல்வி புரொடக்சன்ஸ் (தமிழ்)
ஸ்ரீ ராகவா புரொடக்சன்ஸ் (தெலுங்கு)
வெளியீடு11 மே 2007 (தமிழ்)
31 ஆகத்து 2007 (தெலுங்கு)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

திரு ரங்கா 2007 ஆம் ஆண்டு ரவி பார்கவன் இயக்கத்தில், சந்தோஷ் மற்றும் அங்கிதா நடிப்பில், சிறீகாந்த் தேவா இசையில், ஏ. செல்வி மற்றும் சத்யநாராயணா தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் தமிழில் 2007 மே 11 அன்றும், தெலுங்கு மொழியில் ஜூலாயி என்ற பெயரில் 2007 ஆகஸ்ட் 31 அன்றும் வெளியானது[1][2].

கதைச்சுருக்கம்[தொகு]

ரங்கா (சந்தோஷ்), பீடா (ரமேஷ் கண்ணா), சுனில் (சுனில் ) மற்றும் சுந்தரம் (சுந்தர்) ஆகியோர் ஒன்றாக வசிக்கின்றனர். ரங்கா கணினி மென்பொருள் பொறியாளராக பணியாற்றுவதாக அவனது நண்பர்கள் நினைக்கின்றனர். ஆனால் ரங்கா, ராயப்பன் (நாசர்) என்பவனிடம் அடியாளாக இருக்கிறான். மங்கா (தேஜாஸ்ரீ) சந்தோஷை விரும்புகிறாள். ஒருநாள் ரங்காவின் பணி பற்றி அவனது நண்பர்களுக்குத் தெரியவர தன் கடந்தகாலத்தை சொல்கிறான்.

பட்டதாரியான ரங்கா வேலை தேடிக் கொண்டிருக்கிறான். அவனது பெற்றோர்கள் (நிழல்கள் ரவி மற்றும் குயிலி) மற்றும் இரண்டு சகோதரிகள் தீபா (நந்திதா ஜெனிபர்) மற்றும் லட்சுமி (சீமா) ஆகியோருடன் மகிழ்ச்சியாக வசிக்கிறான். வரதட்சணை காரணமாக லட்சுமியின் திருமணம் தடைபடுகிறது. இதனால் ரங்காவைத் தவிர அனைவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். தன் குடும்பத்தைப் போல் வேறு எந்த குடும்பமும் பாதிக்கப்படக்கூடாது என்று முடிவு செய்யும் ரங்கா தன் படிபேக்கேற்ற வேலை கிடைக்காததால் ரவுடியாக மாறுகிறான்.

ராயப்பன் மற்றும் அரசியல்வாதியான ரெட்டி (ஜெய பிரகாஷ் ரெட்டி) இருவரும் நடிகை ஸ்ரீயை (அங்கிதா) அடைய விரும்புகின்றனர். அதற்கு இணங்க மறுக்கும் ஸ்ரீ அவர்களை அவமானப்படுத்துகிறாள். எனவே அவளைக் கடத்த முடிவுசெய்து அந்த வேலையை ரங்காவிடம் ஒப்படைக்கின்றனர். அவர்களிடமிருந்து ஸ்ரீயைக் காப்பாற்ற முடிவு செய்கிறான் ரங்கா. அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் ரங்காவைக் காதலித்துத் திருமணம் செய்கிறாள் ஸ்ரீ. இருவரும் திரைப்படக் கதாநாயகனாக மாறும் ரங்கா தன் மனைவி ஸ்ரீயுடன் திரைப்படத்தில் நடிக்கிறான்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. பாடலாசிரியர்கள் பா. விஜய் மற்றும் நா. முத்துக்குமார்[3][4]. இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான ஜூலாயி படத்தின் பாடல்கள்[5] 2007 ஏப்ரல் 1 அன்று ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ரெக்கார்ட் தியேட்டரில் வெளியானது[6].

தமிழ் பாடல்கள்
வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஒண்ணு ரெண்டு சங்கர் மகாதேவன் 3:44
2 இவனே இவனா கார்த்திக், பிரியதர்ஷினி 5:16
3 மதுரவீரா மாலதி லட்சுமண், ஸ்ரீராம் பார்த்தசாரதி 4:46
4 ஒண்ணு ரெண்டு சங்கர் மகாதேவன் 4:30
5 பொள்ளாச்சி திப்பு, அனுராதா ஸ்ரீராம், ரோஷிணி 4:52
6 தகதிமி சுசித்ரா 5:09
தெலுங்கு பாடல்கள்
வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஓகட்டி ரெண்டு ராமு 4:30
2 இதானே இதானா ராகுல் நம்பியார் 5:14
3 மதன வீரா ராமு 4:43
4 போக்கிரி ரவி கே. குமார் 4:49
5 தகதிமி அஞ்சனா சௌம்யா 6:12
6 ஏதோ ஏதோ மாயா பிரணவி 4:04

மேற்கோள்கள்[தொகு]

  1. "திரு ரங்கா".
  2. "திரு ரங்கா". Archived from the original on 2017-02-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  3. "பாடல்கள்". Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  4. "பாடல்கள்".
  5. "ஜூலாயி பாடல்கள்". Archived from the original on 2021-06-17. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  6. "பாடல் வெளியீடு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு_ரங்கா&oldid=3942676" இலிருந்து மீள்விக்கப்பட்டது