உள்ளடக்கத்துக்குச் செல்

ஹன்சிகா மோட்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹன்சிகா மோட்வானி

இயற் பெயர் அன்சிக்கா பிரதீப் மொட்வானி
பிறப்பு ஆகத்து 9, 1991 (1991-08-09) (அகவை 34)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
வேறு பெயர் சீமா மொட்வானி
தொழில் நடிகை, வடிவழகி
நடிப்புக் காலம் 2001-இன்று வரை

ஹன்சிகா மோட்வானி (ஆங்கிலம்: Hansika Motwani, பிறப்பு: ஆகத்து 9, 1991) ஓர் இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரின் தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.[1] ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் பன்னாட்டுப் பள்ளியில் கல்வி பயின்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். இது குற்றப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு சன்யாசியின் மேல் காதல் கொள்வதைப் பற்றிய திரைப்படமாகும். இதில் சன்யாசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.[2]

பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக ஆப் கா சரூர் - த ரியல் லவ் ஸ்டோரி யில் இமேஷ் ரெஷிமியாவுடன் ஹன்சிகா அவரது முதல் தொடக்கத்தைத் தந்தார். இதில் இமேஷ் ரெஷிமியாவின் காதலி ரியாவாக பாத்திரம் ஏற்றிருந்தார். 29 ஜூன் 2007 அன்று இத்திரைப்படம் வெளியானது, இத்திரைப்படம் இடைப்பட்ட வெற்றியைக் கொடுத்தது. இதன் பின்னர் ஹீ: த ஒன்லி ஒன் எனத் தலைப்பிடப்பட்ட இந்தித் திரைப்படத்தில் அவரது குடும்பத்திற்காகப் பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைகாரி பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டிருந்தார்,[3] இப்படம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 15 பிப்ரவரி 2008 அன்று வெளியானது, இது ஹன்சிகா இதுவரை நடித்த ஒரேயொரு கன்னடத் திரைப்படமாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான காண்ட்ரி திரைப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் மிதமான வெற்றியைப் பெற்றது. மேலும் மஸ்கா எனும் தெலுங்குத் திரைப்படத்தில் ராமுடன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

திரைப்பட விவரங்கள்

[தொகு]
திரைப்படம்
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2003எஸ்கேப் ஃப்ரம் தாலிபான்கன்சாஇந்திகுழந்தை நட்சத்திரம்
2003ஹவாசஞ்சனாவின் மகள்இந்திகுழந்தை நட்சத்திரம்
2003கோயி...மில் கயாபிரியா சிக்ஸ்இந்திகுழந்தை நட்சத்திரம்
2003ஆப்ரா கா டாப்ராபிங்கிஇந்திகுழந்தை நட்சத்திரம்
2004ஜாகோசுருதிஇந்திகுழந்தை நட்சத்திரம்
2004ஹம் கோன் ஹேசாரா வில்லியம்ஸ்இந்திகுழந்தை நட்சத்திரம்
2007தேசமுதுருவைசாலிதெலுங்குவெற்றியாளர் , ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி (தெற்கு)
2007ஆப் கா சரூர்ரியாஇந்திபரிந்துரைக்கப்பட்டார், ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி விருது
2008பிந்தாஸ்பிரீத்திகன்னடம்
2008கந்திரிவரலக்‌ஷ்மிதெலுங்கு
2008மனி ஹே தோ ஹனி ஹேஆஷிமா கபூர்இந்தி
2009மஸ்காமீனுதெலுங்கு
2009பில்லாபிரியாதெலுங்குகௌரவத் தோற்றம்
2009ஜெயீபவாஅஞ்சலி நரசிம்காதெலுங்கு
2010சீதாராமுல கல்யாணம்நந்தினிதெலுங்கு
2011வேலாயுதம்வைதேகிதமிழ்
2011மாப்பிள்ளைகாயத்ரிதமிழ்
2011எங்கேயும் காதல்கயல்விழிதமிழ்
2011ஓ மை பிரண்ட்ரிடுதெலுங்கு
2012ஒரு கல் ஒரு கண்ணாடிமீராதமிழ்
2012தேனிகைனா ரெடிஷர்மிலாதெலுங்கு
2013சேட்டைமதுமிதாதமிழ்
2013வேட்டை மன்னன்தமிழ்படப்பிடிப்பில்
2013சிங்கம் 2சத்யாதமிழ்
2013பிரியாணிபிரியங்காதமிழ்
2013தீயா வேலை செய்யணும் குமாருசஞ்சனாதமிழ்
2014மான் கராத்தேயாழினிதமிழ்
2014அரண்மனைசெல்விதமிழ்
2015ஆம்பளமாயாதமிழ்
2015ரோமியோ ஜூலியட்ஐஸ்வர்யாதமிழ்
2015வாலுபிரியா மகாலட்சுமிதமிழ்
2015அரண்மனை 2மாயாதமிழ்
2015புலிமந்தாகினிதமிழ்
2015இஞ்சி இடுப்பழகிஅவரேதமிழ்
2015சைஸ் சீரோஅவரேதெலுங்கு
2016போக்கிரி ராஜாசுனிதாதமிழ்
2016உயிரே உயிரேபிரியாதமிழ்
2016மனிதன்பிரியாதமிழ்
2016போகன்மகாலட்சுமிதமிழ்
2018துப்பாக்கி முனைமைதிலிதமிழ்
2019100மேகாதமிழ்
தொலைக்காட்சி
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2003கியான்கி சாஸ் பி கபி பாகு திபாவ்ரி விரானிஇந்தி
2003தேஸ் மெய்ன் நிக்கிலா ஹோகா சந்த்டினாஇந்தி
2003கரிஷ்மா கா கரிஷ்மாஇந்தி
2003ஷாகலகா பூம் பூம்கருணாஇந்தி
2004ஹம் 2 ஹெயின் நாகரீனா / கோல்இந்தி
2004சிராஸ்ஹனிஇந்தி

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.bollywoodwiki.info/page/Hansika+Motwani
  2. "Hansika charges 50 lakhs!". Sify. Retrieved 26 November. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |work= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. "Hansika - The latest find". Rediff. Retrieved 26 November. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |work= (help); Unknown parameter |accessyear= ignored (help)

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்சிகா_மோட்வானி&oldid=4469937" இலிருந்து மீள்விக்கப்பட்டது