கார்த்திக் சிவகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்தி சிவகுமார்
Karthistudio.jpg
பிறப்புகார்த்திக் சிவகுமார்
25 மே 1977 (1977-05-25) (அகவை 45)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007-இன்று வரை
பெற்றோர்சிவகுமார் , லட்சுமி
வாழ்க்கைத்
துணை
ரஞ்சனி (தி. 2011)
பிள்ளைகள்உமையாள், கந்தன் [2]
உறவினர்கள்சூர்யா (அண்ணன்)
ஜோதிகா (அண்ணி)
பிருந்தா சிவக்குமார் (தங்கச்சி)

கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் சிவகுமார் (25 மே 1977) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன் (2007), ஆயிரத்தில் ஒருவன் (2010), மெட்ராஸ் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் காவியமான பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் "வந்தியத்தேவன்" கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி ஆகியோர்க்கு சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

இவரது திருமணம் சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், 3 சூலை 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.[3] இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகள் உண்டு.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 2005 ஆம் ஆண்டு வெளியிடப்படுமென அறிவித்து நிதி பிரச்சனை காரணமாக சனவரி 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியை அடைந்தது. அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 3 வருட படப்பிடிப்புக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியானது.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2007 பருத்தி வீரன் பருத்தி வீரன் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தமிழக அரசு சிறந்த நடிகர் விருது
விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2010 ஆயிரத்தில் ஒருவன் முத்து பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
பையா சிவா பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
நான் மகான் அல்ல ஜீவா பிரகாசம் பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
2011 சிறுத்தை ரத்னவேல் பாண்டியன்,
ராக்கெட் ராஜா
கோ கார்த்திக் சிவகுமார் (சிறப்பு தோற்றம்)
2012 சகுனி கமலக்கண்ணன்
2013 அலெக்ஸ் பாண்டியன் அலெக்ஸ் பாண்டியன்
ஆல் இன் ஆல் அழகு ராஜா அழகுராஜா 2013 தீபாவளி வெளியிடு
பிரியாணி சுகன்
2014 மெட்ராஸ் காளி
2015 கொம்பன் கொம்பையா பாண்டியன்
2016 தோழா சீனு தமிழ்-தெலுங்கு இரு மொழித் திரைப்படம்
காஷ்மோரா காஷ்மோரா, ராஜ் நாயக்
2017 காற்று வெளியிடை வருண் சக்கரபாணி
தீரன் அதிகாரம் ஒன்று தீரன் திருமரன்
2018 கடைக்குட்டி சிங்கம் குணசிங்கம்
2019 தேவ் தேவ் ராமலிங்கம்
கைதி தில்லி
தம்பி விக்கி, சரவணன்
2020 சுல்தான் அமிதாப் குமாரசாமி
2021 பொன்னியின் செல்வன் செப்டம்பர் இறுதியில் வெளியீடு
2022 விருமன் விருமன்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy Birthday Karthi!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 May 2013. Archived from the original on 27 ஜூன் 2013. https://web.archive.org/web/20130627114902/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-25/news-interviews/39520518_1_karthi-biriyani-azhagu-raja. பார்த்த நாள்: 25 May 2013. 
  2. https://tamil.filmibeat.com/news/actor-karthi-was-persuaded-by-the-need-for-a-second-child/articlecontent-pf288517-099015.html
  3. "கார்த்தி சிவகுமாரின் திருமணவிழா".