கடைக்குட்டி சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடைக்குட்டி சிங்கம்
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புசூர்யா
கதைபாண்டிராஜ்
இசைடி. இமான்
நடிப்புகார்த்திக்
சாயிஷா சைகல்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
வெளியீடுசூலை 13, 2018 (2018-07-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam), பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஆர்த்தனா பினு ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் டி. இமானின் இசையில் வேல்ராஜின் ஒளிப்பதிவில், உருவாகியுள்ளது.[2] இத்திரைப்படம் தெலுங்கில் சின்ன பாபு என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.[3] இத்திரைப்படமானது சூலை 13, 2018 அன்று வெளியானது.

நடிப்பு[தொகு]

படப்பணிகள்[தொகு]

கார்த்திக் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா 2017இல் இயக்குநர் பாண்டிராஜூடன் இத்திரைப்படத்திற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.[4] நவம்பர் 9, 2017இல் சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன் தொடங்கியது.[5] 2018 இன் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தென்காசிக்குச் சென்றனர்.[6] தியாகராய நகரிலுள்ள நடிகை மனோராமாவின் இல்லத்தில் இப்படத்திற்காக சில காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.[7]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடைக்குட்டி_சிங்கம்&oldid=2702292" இருந்து மீள்விக்கப்பட்டது