உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல் இன் ஆல் அழகு ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல் இன் ஆல் அழகு ராஜா
இயக்கம்எம். ராஜேஷ்
தயாரிப்புகே. இ. ஞானவேல் ராஜா
கதைஎம். ராஜேஷ்
இசைஎஸ். தமன்
நடிப்பு
ஒளிப்பதிவுபாலசுப்ரமணியம்
சக்தி சரவணன்
படத்தொகுப்புவிவேக் ஹர்சன்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுநவம்பர் 2, 2013 (2013-11-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்9.1 கோடி[1]

ஆல் இன் ஆல் அழகு ராஜா (ஆங்கிலம்: All in All Azhagu Raja), நவம்பர் 2, 2013ல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இது தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ஆகும். இதில் கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால், பிரபு, சரண்யா, நாசர், பாசுகர் போன்றோர் நடித்துள்ளனர்.

கதை சுருக்கம்

[தொகு]

கார்த்திக் (இராஜா) தென்காசியில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறார். அவருடைய உதவியாளர் சந்தானம். தன்னுடைய தொலைக்காட்சி புகழ்பெற்று தான் ஒரு கோடி சம்பாதிக்கும் வரை தனக்கு திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார். ஒரு திருமணத்தில் காஜல் அகர்வாலைச் (தேவிப் பிரியா) சந்தித்ததும் அவரைக் காதலிக்க தொடங்குகிறார். பிரபு அத்திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்து ஏன் என்பதை கார்த்திக்குக்கு விளக்குகிறார். முடிவில் கார்த்தியும் காஜல் அகர்வாலும் இணைந்தார்களா என்பதை இயக்குநர் நகைச்சுவையாக சொல்லியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_இன்_ஆல்_அழகு_ராஜா&oldid=3776959" இலிருந்து மீள்விக்கப்பட்டது