நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான் மகான் அல்ல
Audio poster
இயக்கம்சுசீந்திரன்
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புகார்த்தி
காஜல் அகர்வால்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
விநியோகம்கிளவுட் நைன் மூவீஸ்
வெளியீடுஆகஸ்ட் 20, 2010
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் மகான் அல்ல 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை சுசீந்திரன் இயக்க, கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கதைச் சுருக்கம்[தொகு]

ஜாலியான, மனதில் பட்டதை உடனே சொல்லும்/செய்யும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞன் கார்த்தி. கால் டாக்ஸி டிரைவர் அப்பா, அம்மா, தங்கை, நிறைந்த நண்பர்கள் என வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டு, வேலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் கார்த்தி, தன் தோழியின் திருமணத்தில் காஜல் அகர்வாலைக் கண்டதும் காதலிக்கிறார். காஜலும் காதல் வயப்பட இனிமையாக நகருகிறது. இடையில் கல்லூரியில் படிக்கும் சில இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்கள், போதை பழக்கத்தினால் பல தவறுகளை துணிவுடன் செய்பவர்களாக உள்ளனர். ஒரு முறை நண்பனின் காதலுக்கு உதவும் பொருட்டு ஒரு பெண்ணை கார்த்திக் அப்பா ஜெயப்பிரகாஷின் காரில் கூட்டி வருகிறார்கள். போதை மயக்கத்தில் அப்பெண்ணையே நண்பர்கள் புணர்ந்து, அவளையும், அவள் காதலனையும் கொலையும் செய்கிறார்கள். உடலை அப்புறப்படுத்திய சில நாட்கள் கழித்து உடல் போலீஸ் வசம் சிக்க, அதை டிவியில் காணும் ஜெயப்பிரகாஷ் அப்பெண்ணை அடையாளம் காட்டுகிறார். தாங்கள் மாட்டிவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவரை கொலை செய்ய முயல்கிறார்கள். அதில் தோல்வி அடைந்து பின் நண்பனின் மாமா துணைக் கொண்டு சரியாக திட்டம் தீட்டி ஜெயப்பிரகாஷ்ஷை கொல்கிறார்கள். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களை தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களைப் பழிவாங்குகிறான்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]