காஷ்மோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காஷ்மோரா
இயக்கம்கோகுல்
தயாரிப்புடிரீம் வாரீயார் பிச்சர்ஸ்
கதைராஜு முருகன்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புகார்த்தி
நயந்தாரா
ஸ்ரீதிவ்யா
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புசாபு ஜோசப்
கலையகம்ராஜீவன்
மொழிதமிழ்

காஷ்மோரா என்பது ஓர் இந்தியத் தமிழ் மொழி திரைப்படம் ஆகும். நடிகர் கார்த்தி நடிக்க இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் நயந்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.[1][2]

இத்திரைப்படம் 2016ஆம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்டது.[3]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2015ஆம் ஆண்டு மே மாதம் துவங்கியது. சிறுத்தை திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த கார்த்தி இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார்.[4] இந்தப் படம் 60 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

கார்த்தி ஒரு அரசன், ஒரு தற்கால இளைஞன் மற்றுமொறு போர்விரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக உள்ளார். நயன்தாரா ஒரு அரசி வேடத்திலும், ஸ்ரீதிவ்யா ஒரு துப்பறிவு செய்தியாளர் வேடத்திலும் நடிக்கின்றனர். விவேக் இந்தப் படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடிக்கிறார். இன்தத் தகவலை பாலக்காட்டு மாதவன் திரைப்பட வெளியிட்டு விழாவில் அறிவித்தார்.[5]

ரௌத்திரம், இதற்குத்தானே பட்டாய் பாலகுமரா, படங்களைத் தொடர்ந்து காஷ்மோராவை கோகுல் இயக்கி வருகிறார். அரசகால காடசிகள் நிறைந்த இந்தப் படத்தின் கலைவடிவம் ராஜீவன் செய்கிறார். ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஷ்மோரா&oldid=2704350" இருந்து மீள்விக்கப்பட்டது