வாழ்த்துகள் (திரைப்படம்)
தோற்றம்
வாழ்த்துகள் | |
---|---|
![]() திரைப்படத்தின் விளம்பரக் காட்சி | |
இயக்கம் | சீமான் |
தயாரிப்பு | சிவா |
கதை | சீமான் (கதை மற்றும் வசனம்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | மாதவன் பாவனா |
வெளியீடு | சனவரி 14, 2008 |
மொழி | தமிழ் |
வாழ்த்துகள் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தை சீமான் இயக்கியுள்ளார்.[1] முக்கியக் கதாபாத்திரங்களில் மாதவன், பாவனா நடித்திருந்தனர். இத்திரைப்படம் சனவரி 14, 2008 இல் திரையிடப்பட்டது.
கதை
[தொகு]வாழ்த்துகள் படத்தில் பாவனாவைக் காதலிக்கும் மாதவன் தன் காதலியின் கூட்டுக் குடும்பத்தின் எதிர்ப்பைத் தன் அன்பான அணுகுமுறையாலும் உறுதியாலும் மாற்றி இறுதியில் அவரை மணந்து கொள்வது தான் கதை.
நடிகர்கள்
[தொகு]- மாதவன் - டி. கதிரவன்
- பாவனா - கயல்விழி திருநாவுக்கரசு
- வெங்கட் பிரபு - கலை
- இளவரசு - திருநாவுக்கரசு
- ஆர். கே. - வெற்றிச்செல்வன் செல்வநாயகம்
- ந. முத்துசாமி - செல்வநாயகம்
- விஜயலட்சுமி - வெண்ணிலா
- டி. சிவா- மருத்துவர்
- தி. வேல்முருகன்
- மல்லிகா சுகுமாரன்
- ரேவதி சங்கரன்
- மருது
- மு இராமசாமி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை நா. முத்துக்குமார் எழுதியிருந்தார்.[2]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"எந்தன் வானமும் நீதான் " | ஹரிசரண், மஹதி | 5:29 |
"சின்ன சின்ன" | சுவேதா மோகன் | 4:17 |
"பூக்கள் இரசித்தது" | ஹரிசரண், அஜிந்தன் | 3:52 |
"முழுமை நிலா" | ஸ்ரீராம் பார்த்தசாரதி, முகேஷ் | 2:03 |
"உன்மேல ஆசப்பட்டு" | எஸ். பி. பி. சரண், அனுராதா ஸ்ரீராம் | 4:00 |
"கண்ணில் வந்ததும்" | ஹரிசரண், திசாந்தன் | 5:15 |
"எந்தன் வானமும் நீதான்" | ராகுல் நம்பியார், இராஜலட்சுமி | 5:27 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ K, Janani (3 June 2017). "GV Prakash and Seeman unite". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). Archived from the original on 18 February 2025. Retrieved 18 February 2025.
- ↑ "Vazhthukkal (Original Motion Picture Soundtrack)". Apple Music. 14 February 2008. Archived from the original on 18 February 2025. Retrieved 21 July 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- வாழ்த்துகள் உத்தியோக பூர்வதளம் பரணிடப்பட்டது 2008-01-19 at the வந்தவழி இயந்திரம்