என்றென்றும் புன்னகை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்றென்றும் புன்னகை
வகை
இயக்குனர்ஆர்.கே.
நடிப்பு
 • நட்சத்திரா ஸ்ரீனிவாஸ்
 • நிதின் ஐயர்
 • தீபக் குமார்
 • கவிதா
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நீலிமா ராணி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்இசாய் பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்மார்ச் 16, 2020 –
ஒளிபரப்பில்

என்றென்றும் புன்னகை என்பது ஒரு தமிழ் மொழி காதல் தொடர் ஆகும், இது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 2020 மார்ச் 16 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இது நீலிமா ராணியின் இசாய் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த தொடரின் முக்கிய கதாநாயகர்களாக நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், தீபக் குமார் மற்றும் நிதின் ஐயர் ஆகியோர் உள்ளனர்.[1][2][3]

இந்த தொடரில் தென்றலாக நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் நடிக்கின்றார். இவர் சிவகாமி, மாயா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிதின் ஐயர், தீபக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரில் நடிகை கவிதா வில்லியாக மற்றும் ஆகாஷ் பாட்டியாக நடிக்கிறார்.[4][5][6]

கதைச்சுருக்கம்

ஆண்டாள் தனது பேரனை தென்றல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். பின்னர், ஆகாஷ் ஆண்டாளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார் என்பதையும் தனிமனிதன் இல்லை என்பதையும் தென்றல் உணர்ந்தார். தென்றல், ஆகாஷை மணந்து பிடிவாதமான ஆண்டாளின் கட்டுப்பாட்டில் வாழ ஒப்புக்கொள்வாரா அல்லது, அவள் உண்மையான அன்பை வேறொரு இடத்தில் கண்டுபிடிப்பாளா என்பதே இக்கதையின் சுருக்கமாகும்.

நடிகர்கள்

 • நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் - ஆர்ஜே தென்றல்
 • நிதின் ஐயர் - ஆகாஷ்
 • தீபக் குமார் - சித்தார்த்
 • கவிதா - ஆண்டாள்
 • நரசிம்மராஜு - விசுவாசம்
 • வி. ஜே. சசிகலா
 • சூப்பர்குட் கண்ணன்
 • கௌதமி வெம்புநாதன் - லட்சுமி
 • கிரிஷ் - தென்றலின் தந்தை
 • இந்திரன்
 • முரளி
 • சூப்பர்குட் கண்ணன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி 3:00 PM மணி தொடர்கள்
Previous program என்றென்றும் புன்னகை
(ஒலிபரப்பில்)
Next program
செம்பருத்தி
மறுஒலிபரப்பு
-