இருமுகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமுகன்
Theatricle release poster
இயக்கம்ஆனந்த் சங்கர்
தயாரிப்புசிபு தமீன்
கதைஆனந்த் சங்கர்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிக்ரம்
நயன்தாரா
நித்யா மேனன்
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்பு புவன் ஶ்ரீனிவாசன்
கலையகம்தமீன் பிலிம்ஸ்
வெளியீடு8 செப்டம்பர் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு40 crore [1]
மொத்த வருவாய்80கோடி

இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கிய ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு திசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கிய இத்திரைப்படத்தினை சிபு தமீன் தயாரித்துள்ளார். மேலும் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜயராஜ் மற்றும் ஒளிப்பதிவாளராக ஆர். டி. ராஜசேகர் ஆகியோரும் பணியாற்றினர்.[2] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் இன்க்கொக்கடு என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2016ல் கூட்டாக வெளியிடப்பட்டது. பிறகு 2017ம் ஆண்டு இந்தி மொழியில் இன்டர்நேஷனல் ரௌடி என்ற பெயரில் வெளியானது.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் வரிகள் பாடகர்கள் நீலம்
1. "ஹலேனா" மதன் கார்கி அபய் ஜோத்புர்கர், உஜ்ஜயினி ராய், கிறிஸ்டோபர் ஸ்டான்லி 4:48
2. "ஓ மாயா" தாமரை என்.சி. காருண்யா, ரம்யா என்.எஸ்.கே 5:03
3. "கண்ணை விட்டு" மதன் கார்கி திப்பு, ஸ்ரீமதுமிதா, பிரவீன் சைவி 6:02
4. "இருமுகன் சேட்டை" கவிதை குண்டர் எம்சி ஜெஸ் கவிதை குண்டர் எம்சி ஜெஸ், ஸ்டீவ் வாட்ஸ், மாளவிகா மனோஜ் 4:05
5. "ஃபேஸ் ஆஃப் (தீம்)" (Face off (Theme)) மரியா ரோ வின்சென்ட் 2:14

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமுகன்_(திரைப்படம்)&oldid=3709316" இருந்து மீள்விக்கப்பட்டது