தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
Current awards 2வது சீமா விருதுகள்
Siima awards 2012-banner.png
சீமா விருது விழா
விருதுக்கான
காரணம்
தென் இந்திய சினிமா
வழங்கியவர் விஷ்ணுவர்தன் இந்துரி
நாடு இந்தியா
முதலாவது விருது 2012
[siima.in அதிகாரபூர்வ தளம்]

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA விருதுகள்) தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை கௌரவப்படுதும் விழாவாகும். இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட உலகினர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்படும். இவ்விழா இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் SIIMA விழா (துபாய் உலக வர்த்தக மையத்தில்) ஜூன் 21-22-2012 அன்று நடைபெற்றது.

சீமா விருதுகள் 2012[தொகு]

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, முதல்முறையாக 2012ம் ஆண்டு தொடங்கியது. இந்த விழா துபாயில் ஜூன் 21–22, 2012ம் ஆண்டு ஆரம்பித்தது . இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் அச்சு ஊடக உதவிகளை வழங்கியது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர்.

இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

விருது நிகழ்ச்சிக்கிடையே பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இக்கலை நிகழ்ச்சியில் சமீரா ரெட்டி, சுருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, சார்மி, அமலா பால், தீட்சா சேத், பிரியாமணி, நிதி சுப்பையா, ஐன்ட்ரிதா ராய், பாரூல் யாதவ், கேத்ரின், பூர்ணா, ஹரிப்ரியா மற்றும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மற்றும் நான்கு மொழிகளிலும் இருந்து ஏராளமான திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.

தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு[தொகு]

சீமா விருதுகள் 2013[தொகு]

இது செப்டம்பர் மாதம் 12, 13ம் தேதிகளில் சார்ஜாவில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.

நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. விழாவை ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ், தனுஷ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, சொஹைல் கான், நடிகைகள் ஸ்ரீதேவி, அசின், காஜல் அகர்வால், பிரியாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருது வழங்கும் விழாவில் நடிகைகள் சுருதி ஹாசன், ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா, சார்மி, ரம்யா, ரிச்சா உள்ளிட்டோர் நடனமாடினார்கள். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு[தொகு]

விழா[தொகு]

விழா திகதி தொகுப்பாளர்கள் இடம் நகரம்
1வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் ஜூன் 21–22, 2012 லட்சுமி மஞ்சு
மாதவன்
பார்வதி ஓமனகுட்டன்
துபாய் உலக வர்த்தக மையம் ஐக்கிய அரபு அமீரகம் துபாய்
2வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் செப்டம்பர் 12–13, 2013 ஆர்யா
சிரேயா சரன்
ராணா டக்குபாதி
சோனு சூட்
பார்வதி ஓமனகுட்டன்
சாம்பல் சாண்ட்லர்
எக்ஸ்போ மையம் சார்ஜா ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜா

வெளி இணைப்புகள்[தொகு]