காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் | |
---|---|
2018 இல் காஜல் அகர்வால் | |
பிறப்பு | காஜல் அகர்வால் சூன் 19, 1985 பம்பாய், மகாராட்டிரம்[1] |
இருப்பிடம் | ஐதராபாத் , ஆந்திரப் பிரதேசம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2004- தற்போது வரையிலும் |
பெற்றோர் | தந்தை: வினய் அகர்வால் தாயார்: சுமன் அகர்வால் |
துணைவர் | கௌதம் கிட்ச்லு (ஆ. 2020) |
பிள்ளைகள் | 1 |
காஜல் அகர்வால் (Kajal Aggarwal, பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.[2] இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.[3]
இளமைக் கால வாழ்க்கை
[தொகு]மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
திரை வாழ்க்கை
[தொகு]ஆரம்ப காலம்
[தொகு]இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.[4][5] பின்னர் 2007-ம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார். இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார். இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.[6]
அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.[7][8]
புகழின் உச்சத்தில் (2009 – தற்போது வரையிலும்)
[தொகு]2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஓடாத நிலையில், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.[9][10][11][12][13][14][15], இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.
தற்போது, சூர்யாவுடன், மாற்றான் திரைப்படத்திலும்[16][17] ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.[18][19] தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.[20]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2004 | கியூன்! ஹோ கயா நா... | தியாவின் தோழி | இந்தி | |
2007 | லக்ஷ்மி கல்யாணம் | லக்ஷ்மி | தெலுங்கு | |
2007 | சந்தமாமா | மஹாலக்ஷ்மி | தெலுங்கு | |
2008 | பவ்ருடு | சம்யுக்தா | தெலுங்கு | |
2008 | பழனி | தீப்தி | தமிழ் | |
2008 | ஆட்டாடிஸ்டா | சுன்னந்தா | தெலுங்கு | |
2008 | சரோஜா | பூஜா | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2008 | பொம்மலாட்டம் | அனிதா | தமிழ் | |
2009 | மோதி விளையாடு | ஈஸ்வர் லக்ஷ்மிராம் | தமிழ் | |
2009 | மஹதீரா | யுவராணி மித்ராவிந்த தேவி, இந்திரா (இந்து) |
தெலுங்கு | பரிந்துரைக்கப்பட்டவை — சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது - (தெலுங்கு) |
2009 | கணேஷ் ஜஸ்ட் கணேஷ் | திவ்யா | தெலுங்கு | |
2009 | ஆர்யா 2 | கீதாஞ்சலி | தெலுங்கு | |
2010 | ஓம் சாந்தி | மேக்னா | தெலுங்கு | |
2010 | டார்லிங் | நந்தினி | தெலுங்கு | பரிந்துரைக்கப்பட்டவை — சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது - (தெலுங்கு) |
2010 | நான் மகான் அல்ல | பிரியா சுதர்சன் | தமிழ் | |
2010 | பிருந்தாவனம் | பூமி | தெலுங்கு | வென்றவை, சிறந்த நடிகைக்கான சினிமா விருது (CineMAA Award) |
2011 | மிஸ்டர். பர்பெக்ட் | ப்ரியா | தெலுங்கு | |
2011 | வீரா | ச்சிட்டி | தெலுங்கு | |
2011 | சிங்கம் | காவ்யா போஷ்லே | இந்தி | பரிந்துரைக்கப்பட்டவை — சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது - (இந்தி)
|
2011 | தாதா | ரியா | தெலுங்கு | |
2012 | பிஸ்னஸ் மேன் | சித்ரா | தெலுங்கு | |
2012 | மாற்றான் | அஞ்சலி | தமிழ் | |
2012 | பிரதர்சு | தெலுங்கு | மாற்றானின் தெலுங்கு மொழிபெயர்ப்பு | |
2012 | துப்பாக்கி | நிஷா | தமிழ் | |
2013 | ஸ்பெஷல் சப்பீஸ் | இந்தி | ||
2013 | பாட்ஷா | தெலுங்கு | ||
2013 | யேவது | தெலுங்கு | படப்பிடிப்பில் | |
2013 | ஆல் இன் ஆல் அழகு ராஜா | சித்ரா தேவி பிரியா | தமிழ் | |
2013 | ஜில்லா | சாந்தி | தமிழ் | |
2015 | மாரி | ஸ்ரீதேவி | தமிழ் | |
2016 | கவலை வேண்டாம் | திவ்யா | தமிழ் | |
2017 | விவேகம் | யாழினி | தமிழ் | |
2017 | மெர்சல் | அனுபல்லவி | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=56&cat=2 தினமலர் நாளிதழ்
- ↑ "Magadheera, 100 not out!". Rediff. பார்க்கப்பட்ட நாள் November 12, 2009.
- ↑ "Top Telugu actresses". Rediff. பார்க்கப்பட்ட நாள் December 29, 2009.
- ↑ "Ajay Devgn to romance South actress Kajal". த டைம்ஸ் ஆப் இந்தியா. February 15, 2011 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 11, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110911155445/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-15/news-interviews/28545814_1_ajay-devgn-singam-romance. பார்த்த நாள்: Feb 15, 2011.
- ↑ "Kajal to star with Ajay Devgn". த டைம்ஸ் ஆப் இந்தியா. February 13, 2011 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 2, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121202193827/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-13/news-interviews/28546105_1_kajal-agarwal-ajay-devgn-magadheera. பார்த்த நாள்: Feb 13, 2011.
- ↑ "Kajal: Flying high". Times Of India. June 17, 2008 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 10, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110910140538/http://articles.timesofindia.indiatimes.com/2008-06-17/news-interviews/27767417_1_tamil-film-chandamama-telugu-films. பார்த்த நாள்: Jun 17, 2008.
- ↑ "Chennai Box Office (Oct 25 to 27, 2008)". Sify. Archived from the original on 25 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 October 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Waiting for Lady Luck". The Times of India இம் மூலத்தில் இருந்து 2012-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121203001416/http://articles.timesofindia.indiatimes.com/2009-02-21/news-interviews/28001798_1_lady-luck-lass-allu-arjun. பார்த்த நாள்: Feb 21, 2009.
- ↑ "Magadheera is technically brilliant". Rediff. பார்க்கப்பட்ட நாள் July 31, 2009.
- ↑ "Review: Magadheera". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் August 3, 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Magadheera – a box office legend". idlebrain. Archived from the original on 12 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 August 2009.
- ↑ "'Magadheera' earns 175 successful days!". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் January 21, 2010.
- ↑ Magadheera "Magadheera, 100 not out!". Rediff. பார்க்கப்பட்ட நாள் November 12, 2009.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "Tolly's bigger than Bolly". Times Of India. December 19, 2009 இம் மூலத்தில் இருந்து ஜூலை 8, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708134559/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-19/news-interviews/28105702_1_film-industry-hindi-films-tollywood. பார்த்த நாள்: Dec 19, 2009.
- ↑ "'Magadheera' earns 175 successful days!". பார்க்கப்பட்ட நாள் January 21, 2010.
- ↑ "Kajal confirms Suriya's 'Maatraan'". Indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.
- ↑ "Maatraan in Pakistan". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 19 May 2011.
- ↑ "Vijay to woo Kajal in next!". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 29 December 2011.
- ↑ "Kajal bags the lead in Vijay’s next - Times of India". TimesofIndia. November 18, 2011 இம் மூலத்தில் இருந்து 2013-09-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130902041604/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-18/hubli/30414394_1_kajal-aggarwal-priyanka-chopra-ar-murugadoss. பார்த்த நாள்: 29 December 2011.
- ↑ "Kajal with Mahesh Babu Again". teluguone. பார்க்கப்பட்ட நாள் 17 March 2012.