விவேகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விவேகம்
Poster
இயக்கம்சிவா
தயாரிப்புடி. ஜி. தியாகராசன்
(Presenter)
செந்தில் தியாகராசன்
அர்ஜுன்]]
கதைசிவா
இசைஅனிருத் இரவிச்சந்திரன்
நடிப்புஅஜித்குமார்
விவேக் ஒபரோய்
காஜல் அகர்வால்
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புஆண்டனி எல். ரூபன்
கலையகம்சத்ய ஜோதி பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 24, 2017 (2017-08-24)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு130கோடி
மொத்த வருவாய்102கோடி

விவேகம் (Vivegam) என்பது அஜித் குமார் நடிப்பில் 2017 ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால்,விவேக் ஒபரோய்ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆகத்து 2 அன்று தொடங்கியது.[3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

வெற்றி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும்,[4] ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.[5] அஜித் குமாருடன் பில்லா, ஆரம்பம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அனு வர்த்தன் இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.[6] காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில், கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசனும் கதாநாயகியாக நடிக்கிறார்.[7]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். பாடல்கள் பட்டியல்

பாடல் இசை வரிகள் பாடகர்கள்
சர்வைவா அனிருத் ரவிச்சந்திரன் சிவா, யோகி பி யோகி பி, அனிருத் ரவிச்சந்திரன், மாளவிகா மனோஜ்
தலை விடுதலை அனிருத் ரவிச்சந்திரன் சிவா அனிருத் ரவிச்சந்திரன், ஹரீஷ் சுவாமிநாதன்
காதலாட அனிருத் ரவிச்சந்திரன் கபிலன் வைரமுத்து பிரதீப் குமார், ஷாஷா திருப்பதி
ஏகே தீம் அனிருத் ரவிச்சந்திரன்
வெறியேற அனிருத் ரவிச்சந்திரன் சிவா எம்.எம்.மானசீ, பூர்வி கௌடிஷ்
காதலாட ரீப்ரைஸ் அனிருத் ரவிச்சந்திரன் கபிலன் வைரமுத்து ஷாஷா திருப்பதி, நம்ரதா, பூஜா, அனிருத் ரவிச்சந்தரன்
நெவர் எவர் கிவ் அப் அனிருத் ரவிச்சந்திரன் ராஜ குமாரி ராஜ குமாரி

வரவேற்பு[தொகு]

விவேகம் 2017 ஆகத்து 24 இல் உலகளவில் வெளியானது. கலவையான விமர்சனங்களை கொண்டு வணீக ரீதியாக ஒரு வெற்றி படமாகவே தெரிந்தது. பிரபல தமிழ் சினிமா விமர்சகர்களான Behindwoods இப்படத்திற்கு 2.25 மதிப்பெண் கொடுத்தது.[சான்று தேவை] யூடியூப் விமர்சனங்களில் தமிழ் டாக்கீஸ் மாறன் கொடுத்த விமர்சனம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு விமர்சனம் என்பதை தாண்டி தனி மனித தாக்குதலாக பார்க்கப்பட்ட அந்த விமர்சனத்திற்கு பெருவாரியான அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தை தெரிவித்தனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகம்_(திரைப்படம்)&oldid=3301882" இருந்து மீள்விக்கப்பட்டது