பீட்சா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீட்சா
பீட்சா பட சுவரொட்டி
இயக்கம்கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்புசி. வி. குமார்
கதைகார்த்திக் சுப்புராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புவிஜய் சேதுபதி
ரம்யா நம்பீசன்
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புலியோ ஜான்பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுஅக்டோபர் 19, 2012
ஓட்டம்127 நிமிடங்கள்
மொழிதமிழ்

பீட்சா, ஒரு திகில் தமிழ்த் திரைப்படம் ஆகும். பல குறும்படங்களை இயக்கியுக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜுக்கு இது முதல் திரைப்படமாகும். இப்படத்தைத் தயாரித்தவர் அட்டகத்தி படத் தயாரிப்பாளர் சி. வி. குமார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன், ஓவியர் வீர சந்தானம், சிம்கா ஆகியோர் நடித்துள்ளார்கள். தமிழில் முதல் முறையாக இப்படத்திலேயே 7.1 சவுண்ட் சிசுடம் பயன்படுத்தியுள்ளார்கள் [1].

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மைக்கேலும் (விஜய் சேதுபதி) அனுவும் (ரம்யா நம்பீசன்) ஒன்றாக வாழும் காதலர்கள். மைக்கேல் பீட்சா கடையில் வேலை செய்கிறான். அனு, பேய்ளைப் பற்றிய ஒரு திகில் புதினத்தை எழுத முயன்று வருகிறாள். பேய்களின் இருப்பு மீது நம்பிக்கை கொண்டவள். அனு கருவுறவே, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில், மைக்கேல் வேலை செய்யும் கடை முதலாளி மகளுக்குப் பேய் பிடித்துள்ளதாக நினைத்து அதனைச் சீராக்க முயல்கிறார்கள். இதனை அறிந்து கொண்டது முதல் மைக்கேலுக்கும் அவ்வப்போதும் பேய்கள் குறித்த அச்சம் வருகிறது.

மைக்கேல் ஒரு நாள் இரவு ஒரு மாளிகைக்கு பீட்சா அளிக்கச் செல்கிறான். அங்கு அடுத்தடுத்து கொலைகள் நிகழ்வது போலவும் அங்கு பேய்கள் உலாவுவது போலவும் குழப்பமான நிகழ்வுகள் அமைகின்றன. இதில் உளநலம் பாதிக்கப்பட்ட மைக்கேல் வெகுநேரம் கழித்து கடைக்குத் திரும்பி வருகிறான். அந்த மாளிகையில் என்ன நடந்தது, மைக்கேலுக்கு என்ன ஆனது என்பதே கதை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-12-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்சா_(திரைப்படம்)&oldid=3304581" இருந்து மீள்விக்கப்பட்டது