தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
தற்போதைய: 2வது சீமா விருதுகள்
விளக்கம்தென் இந்திய சினிமா
நாடுஇந்தியா
வழங்குபவர்விஷ்ணுவர்தன் இந்துரி
முதலில் வழங்கப்பட்டது2012
இணையதளம்siima.in

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA விருதுகள்) தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை கௌரவப்படுதும் விழாவாகும். இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட உலகினர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்படும். இவ்விழா இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் SIIMA விழா (துபாய் உலக வர்த்தக மையத்தில்)[1] ஜூன் ஜூன் 21 மற்றும் 22 ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு அன்று நடைபெற்றது.

சீமா விருதுகள் 2012[தொகு]

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, முதல்முறையாக 2012ம் ஆண்டு தொடங்கியது. இந்த விழா துபாயில் ஜூன் 21–22, 2012ம் ஆண்டு ஆரம்பித்தது. இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் அச்சு ஊடக உதவிகளை வழங்கியது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர்.

இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

விருது நிகழ்ச்சிக்கிடையே பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இக்கலை நிகழ்ச்சியில் சமீரா ரெட்டி, சுருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, சார்மி, அமலா பால், தீட்சா சேத், பிரியாமணி, நிதி சுப்பையா, ஐன்ட்ரிதா ராய், பாரூல் யாதவ், கேத்ரின், பூர்ணா, ஹரிப்ரியா மற்றும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மற்றும் நான்கு மொழிகளிலும் இருந்து ஏராளமான திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.[2][3][4][5]

தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு[தொகு]

சீமா விருதுகள் 2013[தொகு]

இது செப்டம்பர் மாதம் 12, 13ம் தேதிகளில் சார்ஜாவில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.

நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. விழாவை ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ், தனுஷ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, சொஹைல் கான், நடிகைகள் ஸ்ரீதேவி, அசின், காஜல் அகர்வால், பிரியாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருது வழங்கும் விழாவில் நடிகைகள் சுருதி ஹாசன், ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா, சார்மி, ரம்யா, ரிச்சா உள்ளிட்டோர் நடனமாடினார்கள். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு[தொகு]

விழா[தொகு]

விழா திகதி தொகுப்பாளர்கள் இடம் நகரம்
1வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் ஜூன் 21–22, 2012 லட்சுமி மஞ்சு
மாதவன்
பார்வதி ஓமனகுட்டன்
துபாய் உலக வர்த்தக மையம் ஐக்கிய அரபு அமீரகம் துபாய்
2வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் செப்டம்பர் 12–13, 2013 ஆர்யா
சிரேயா சரன்
ராணா டக்குபாதி
சோனு சூட்
பார்வதி ஓமனகுட்டன்
சாம்பல் சாண்ட்லர்
எக்ஸ்போ மையம் சார்ஜா ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜா
விழா திகதி தொகுப்பாளர்கள் இடம் நகரம் நாடு மேற்கோள்
1வது 21–22 ஜூன் 2012 லட்சுமி மஞ்சு, மாதவன், பார்வதி ஓமனகுட்டன் துபாய் உலக வர்த்தக மையம் துபாய்  ஐக்கிய அரபு அமீரகம் [3][4][6][7]
2வது 12-13 செப்டம்பர் 2013 ஆர்யா, சிரேயா சரன், ராணா டக்குபாதி, சோனு சூட், பார்வதி ஓமனகுட்டன், சாம்பல் சாண்ட்லர் எக்ஸ்போ மையம் சார்ஜா ஷார்ஜா  ஐக்கிய அரபு அமீரகம் [8][9][10][11]
3வது 12–13 செப்டம்பர் 2014 நவ்தீப், ஷ்ரத்தா தாஸ் (தெலுங்கு)
சிவா, பூஜா ராமசந்திரன் (தமிழ்)
ஸ்டேடியம் நெகாரா கோலாலம்பூர்  மலேசியா [12][13][14][15]
4வது 6 - 7 ஆகஸ்ட் 2015 ரானா தக்குபாடி, அலி,ஸ்ரீமுகி (தெலுங்கு)
சிவா, சுசித்ரா (தமிழ்)
துபாய் உலக வர்த்தக மையம் துபாய்  ஐக்கிய அரபு அமீரகம் [16][17][18][19]
5வது 30 - 1 ஜூலை 2016 அல்லு சிரீஷ், லட்சுமி மஞ்சு (தெலுங்கு)
சிவா, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணா (தமிழ்)
ரஞ்சினி ஹரிதாஸ் (மலையாளம்)
சுண்டெக் கன்வென்ஷன் சென்டர் சிங்கப்பூர்  சிங்கப்பூர் [20]
[21][22][23][24]
6வது 30 – 1 ஜூலை 2017 அல்லு சிரீஷ், லட்சுமி மஞ்சு (தெலுங்கு)
சதீஷ், தன்யா பாலகிருஷ்ணா (தமிழ்)
அபுதாபி தேசிய கண்காட்சி மையம் அபுதாபி  ஐக்கிய அரபு அமீரகம் [25][26][27]
[28][29]
7வது 14–15 செப்டம்பர் 2018 ராகுல் ராமகிருஷ்ணா, பிரியதர்ஷி புல்லிகொண்டா, ஸ்ரீமுகி (தெலுங்கு)
விஜய் ராகவேந்திரா, சம்யுக்தா ஹெட்ஜ் (கன்னடம்)
துபாய் பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்ஸ் துபாய்  ஐக்கிய அரபு அமீரகம் [30][31][32][33][34]
8வது 15–16 ஆகஸ்ட் 2019 ராகுல் ராமகிருஷ்ணா, பிரியதர்ஷி புல்லிகொண்டா, சுமா கனகலா (தெலுங்கு)
ஜனனி ஐயர், மிர்ச்சி சிவா (தமிழ்)
விஜய் ராகவேந்திரா, அனுபமா கவுடா (கன்னடம்)
முத்து மானி (மலையாளம்)
லுசெயில் விளையாட்டு அரங்கம் தோஹா  கத்தார் [35][36][37][38][39]

மேற்கோள்கள்[தொகு]

  1. Manigandan, K. r (16 June 2012). "Star-struck? Head to Dubai". பார்க்கப்பட்ட நாள் 13 September 2016 – via The Hindu.
  2. "Hansika, Sameera & Shruti fire up SIIMA 2012". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  3. 3.0 3.1 "Hansika elated about SIIMA awards – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  4. 4.0 4.1 "South Indian film awards overcome disruptions". The National (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. "Hansika, Sameera & Shruti fire up SIIMA 2012". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. "SIIMA 2013 Awards winners list – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  9. "Inside SIIMA 2013: South cinema wlecomes the next generation". News18. 2013-09-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  10. "Rana Daggubati arrive at SIIMA Awards 2013 | Rana daggubati, Celebrities male, Actors". Pinterest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  11. Kumar, Bojja (2013-09-13). "త్రిషకు SIIMA-2013 స్పెషల్ అవార్డ్ (ఫోటోలు)". telugu.filmibeat.com (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  12. Desk, India TV News (2014-09-14). "SIIMA 2014: Sridevi, Tamanna, Shriya make staggering appearances (view pics)". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  13. "SIIMA 2014 to descend in Malaysia in September". Everything Experiential (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  14. "South Indian Cinema celebrates SIIMA 2014". www.indiainfoline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  15. "SIIMA 2014 Telugu Winners List: Mahesh Babu, Samantha Bag Best Actor Awards". www.filmibeat.com (in ஆங்கிலம்). 2014-09-13. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  16. "Dubai to host South Indian International Movie Awards". The Indian Express. 1 June 2015. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  17. "SIIMA 2015 – News Stories, Latest News Headlines on Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  18. "Siima 2015News: Siima 2015 Latest News, Videos and Photos of Siima 2015". PINKVILLA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  19. Nasreen, Raisa (2015-08-11). "South Indian International Movie Awards SIIMA 2015 Updates at BookMyShow". BookMyShow (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  20. "SIIMA 2016 in Singapore". Sify. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  21. "SIIMA in Singapore: South film industry stars put on a glittering show". Firstpost. 4 July 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  22. "SIIMA 2016 Telugu winners list". Asianet News Network Pvt Ltd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  23. "Popular southern stars come together for SIIMA 2016". The Indian Express (in ஆங்கிலம்). 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  24. Team, DNA Web (2016-05-06). "SIIMA 2016 to be held in Singapore this year!". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  25. "Abu Dhabi hosts sixth edition of South Indian International Movie Awards". Egypt Today. 30 June 2017. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  26. Menon, Vishal (2017-07-03). "Ten reasons why SIIMA 2017 rocked" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/sleepless-at-siima/article19204438.ece. 
  27. "NTR-receives-SIIMA-2017-award News: Latest NTR-receives-SIIMA-2017-award News & Updates on NTR-receives-SIIMA-2017-award |". Samayam Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  28. "Lakshmi Manchu and Allu Sirish will host the SIIMA awards 2017". The Times of India. 16 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  29. Davis, Maggie (2017-07-01). "SIIMA 2017: Rana Daggubati, Shriya Saran, Akhil Akkineni's stylish appearance at the star-studded event is a must see!". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  30. "'Pantaloons SIIMA' to host its 7th Edition in Dubai on September 14–15". Deccan Chronicle. 26 August 2018. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  31. "Siima 2018 Winners". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  32. "'సైమా' అవార్డులు లిస్ట్: సాహోరే బాహుబలి". Samayam Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  33. "SIIMA 2018: Baahubali 2 makers, Shriya Saran and others arrive in Dubai". The Indian Express (in ஆங்கிலம்). 2018-09-13. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  34. "దుబాయ్: సైమా అవార్డ్స్ 2018 విజేతల జాబితా". Zee News Telugu. 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  35. "Doha to host 8th SIIMA Awards next week". Gulf Times. 6 August 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  36. "ETV Bharat". www.etvbharat.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  37. "SIIMA 2019 Telugu & Kannada: Ram Charan's 'Rangasthalam'-Yash's 'KGF' win big, Vijay Deverakonda-'Mahanti' honoured too". DNA India (in ஆங்கிலம்). 2019-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  38. "SIIMA concludes on a high note, Mohanlal 'Most Popular Actor in Middle East'". Gulf-Times (in அரபிக்). 2019-08-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  39. "SIIMA 2019 : సైమా అవార్డుల ప్రకటన.. ఉత్తమ నటీనటులు వీరే." News18 Telugu. 2019-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.

வெளி இணைப்புகள்[தொகு]