12 பி (திரைப்படம்)
| 12 பி | |
|---|---|
12 பி | |
| இயக்கம் | ஜீவா |
| தயாரிப்பு | விக்ரம் சிங் |
| கதை | பாக்யராஜ் |
| இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
| நடிப்பு | ஷாம் சிம்ரன் ஜோதிகா விவேக் சுனில் செட்டி மூன் மூன் சென் |
| வெளியீடு | May 15, 2001 |
| ஓட்டம் | 150 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
12 பி (12B) திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஷாம், சிம்ரன், ஜோதிகா, விவேக் போன்றவர்கள் நடித்துள்ளனர். இயக்குநர் ஜீவாவின் எழுத்து இயக்கம் ஒளிப்பதிவில் வெளிவந்த திரைப்படமாகும்.[1] இப்படத்தின் வழியாக ஜீவா இயக்குநராக அறிமுகமானார். படத்திற்கான உரையாடலை சுஜாதா எழுதினார். ஆரிசு ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்தார்.[2] புன்னகைப்பூவே என்ற பாடல் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. [3] இந்த படத்தில் ஷாம் நாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் சிம்ரன், ஜோதிகா ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். இந்தி நடிகர்கள் சுனில் ஷெட்டி மற்றும் மூன் மூன் சென் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்தொகுப்பை பி. லெனின், வி. டி. விஜயன் ஆகியோர் மேற்கொண்டனர்.
12பி படமானது 1998 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய-அமெரிக்க காதல் நாடகத் திரைப்படமான ஸ்லைடிங் டோர்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வமற்ற மறுஆக்கம் ஆகும். இந்தத் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் இரட்டைக் கதை சொல்லலை அறிமுகப்படுத்தியது; ஒரு மனிதன் ஒரு பேருந்தைப் பிடிப்பதைப் பொறுத்து அவனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை இது சித்தரிக்கிறது. தமிழ்த் திரையுலகின் இரண்டு முன்னணி பெண் நடிகைகளான சிம்ரன், ஜோதிகா ஆகியோர் நடித்ததற்காக இந்தப் படம் கவனத்தைப் பெற்றது; ஷெட்டி, சென் தோன்றிய முதல் தமிழ் படமும் இதுதான். இந்தப் படம் 2001 செப்டம்பர் 28 அன்று வெளியானது.வணிக ரீதியாக சராசரி வெற்றியைப் பெற்றது. விமர்சகர்கள் படத்தின் மாறுபட்ட திரைக்கதை அமைப்பைப் பாராட்டினர், ஆனால் கதையை விமர்சித்தனர், இது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
வேலை தேடிச்செல்லும் நபரான சக்தி ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து மயங்குகின்றார். அவர் அப்பெண்ணின் பின்னே செல்கின்றார். மேலும் அவர் செல்ல வேண்டிய பேருந்தும் சென்றது வங்கியில் அவருக்குக் கிடைக்க வேண்டிய வேலையும் பறிபோனது. அதே வேளை கதையில் மாற்றம். இவ்வாறு அவர் வேலைக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனைக்கதையினுள்ளும் அழைக்கப்படுகின்றோம் நாம். அவ்வாறு வேலைக்குச் செல்லும் சக்திக்கு வங்கியில் வேலை கிடைத்தது. அங்கு அவர் பின் தொடர்ந்து சென்ற பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தும் பயனெதுவும் இல்லை. ஆனால் வங்கியிலிருந்த ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டார். பேருந்து நிலையத்தில் பெண்ணைத் தொடர்ந்து சென்ற சக்தியோ வேலை கிடைக்காது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இறுதியில் நண்பர் ஒருவரின் உதவியுடன் வாகனங்களைத் திருத்துபவராகப் பணி புரிந்தார். இவ்வாறு இருக்கும் போது அவர் பின் தொடர்ந்து சென்ற பெண்ணைப் காண்கின்றார். அவரிடம் உள்ள தன் காதலை வெளிப்படுத்துகின்றார். இருவருக்கும் ஏற்படும் காதலில் திடீரென அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வந்த அவள் மாமன் அவளைத் தான் காதல் செய்வதாகக் கூறுகின்றான். இப்பிரச்சனையிலிருந்து எவ்வாறு சக்தியும் அவன் காதலியும் தப்பிக்கின்றனர் என திரைக்கதை நகருகின்றது.
இசை
[தொகு]இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்தார்.[4] குறிப்பாக "ஒரு புன்னகைப் பூவே" பாடல் பிரபலமானது.[5][6] "ஆனந்தம்" என்ற செல்லிசைப் பாடலை பிரேம்ஜி அமரன் பாடினார்.[7]
குறிப்பில் குறிப்பிடப்பட்ட பாடல்களைத் தவிர எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார். அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
| தமிழ்ப் பாடல்கள் பட்டியல்[8] | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "லவ் பண்ணு (ஒரு புன்னகைப் பூவே)" | கே.கே, பிரசாந்தினி | 4:40 | |||||||
| 2. | "சரியா தவறா" | சமந்தா எட்வர்ட், பெபி மணி, மாதங்கி | 5:02 | |||||||
| 3. | "முத்தம் முத்தம்" | கே.கே, மகாலட்சுமி ஐயர் | 5:02 | |||||||
| 4. | "பூவே வாய் பேசும் போது" | மகாலட்சுமி ஐயர், ஹரிஷ் ராகவேந்திரா | 5:48 | |||||||
| 5. | "ஜோதி நிரஞ்சாவா" | சுக்விந்தர் சிங், பெபி மணி | 4:46 | |||||||
| 6. | "ஆனந்தம்" | பிரேம்ஜி அமரன், கிளிண்டன் செரெஜோ | 2:17 | |||||||
| 7. | "ஓ நெஞ்சே" | சுஜாதா ராவ் | 1:47 | |||||||
| 8. | "ஒரு பார்வை பார்" | கார்த்திக் | 2:22 | |||||||
| 9. | "விருந்து இசை" (இசைக்கருவி, ஷெஹ்னாய்;– எஸ். பல்லேஷ்) | 1:32 | ||||||||
மொத்த நீளம்: |
33:16 | |||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆர்.சி.ஜெயந்தன் (2018-06-08). "பேருந்தைத் தவறவிட்டவர் ஷாமா, ஜீவாவா?". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 9 சூன் 2018.
- ↑ "Fame on a platter". The Hindu. 25 October 2002. Archived from the original on 13 October 2020. Retrieved 25 September 2020.
- ↑ Pinto, Sanjay (24 January 2019). My NDTV Days. India: Pan Macmillan. ISBN 978-1-5290-2260-5. Archived from the original on 30 October 2023. Retrieved 18 March 2023.
- ↑ "Fame on a platter". The Hindu. 25 October 2002. Archived from the original on 13 October 2020. Retrieved 25 September 2020.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்; "Review" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Pinto, Sanjay (24 January 2019). My NDTV Days. India: Pan Macmillan. ISBN 978-1-5290-2260-5. Archived from the original on 30 October 2023. Retrieved 18 March 2023.
- ↑ "Happy Birthday Premgi: 5 memorable tracks of the versatile artist". The Times of India. 11 July 2022. Archived from the original on 11 July 2022. Retrieved 11 July 2022.
- ↑ "12B (2001)". Mio. 2001. Archived from the original on 6 May 2021. Retrieved 1 May 2022.