நண்பேன்டா (திரைப்படம்)
நண்பேன்டா | |
---|---|
இயக்கம் | ஜகதீஷ் |
தயாரிப்பு | உதயநிதி ஸ்டாலின் |
கதை | ஜகதீஷ் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | உதயநிதி ஸ்டாலின் நயன்தாரா சந்தானம் |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | ரெட் ஜெயன்ட் மூவீஸ் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 2, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நண்பேன்டா (Nannbenda) என்பது, ஜகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [1]இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார்.
நடிப்பு
[தொகு]- உதயநிதி ஸ்டாலின்
- நயன்தாரா
- சந்தானம்
- கருணாகரன்
- ஷெரின்
- பூஜா இராமச்சந்திரன்
- சூசானா ஜார்ஜ்
- மனோபாலா
- லொல்லுசபா மனாேகர்
- தமன்னா (சிறப்புத் தோற்றம்)
படப்பிடிப்பு
[தொகு]இயக்குநர் ராஜேஷின் உதவி இயக்குநர் ஜகதீஷ் இயக்கும் நண்பேன்டா எனும் திரைப்படத்தைத் தாயாரித்து, சந்தானத்துடன் இணைந்து தானும் நடிக்கவிருப்பதாக 2013ம் ஆண்டு சூலை மாதம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்[2]. இப்படத்தின் நாயகியாக முதலில் காஜல் அகர்வாலை தேர்ந்தெடுத்தனர்[3]. அதற்காக அவருக்குக் குறிப்பிட்ட தொகையும் முன்பணமாக பெற்றுக் கொண்டார், காஜல். படத்திற்கு முறையான தேதிகள் வழங்கப்படாத நிலையில், வேறு சில தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்[4][5]. இரண்டு மாதங்கள் பொறுத்திருந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, பின்னர் படத்தின் நாயகியாக நயன்தாராவை தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார்[6]. மேலும் இப்படத்தில் தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது[7].
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பாளராகம், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டது. உதயநிதி, ஹாரிஸுடன் நடிகராக மூன்றாவது முறையும், தயாரிப்பாளராக ஐந்தாவது முறையாகவும் இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை
[தொகு]நண்பேன்டா | ||||
---|---|---|---|---|
| ||||
வெளியீடு | 23 திசம்பர் 2014 | |||
ஒலிப்பதிவு | 2014 | |||
இசைப் பாணி | முழுநீளப் படத்தின் இசை | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி நிறுவனம் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜயராஜ் | |||
ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை | ||||
|
ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். சோனி நிறுவனத்தின் மூலம் 2014ம் ஆண்டு திசம்பர் 23ம் நாள் படத்தின் இசை வெளியிடப்பட்டது[8]. இசைவெளியீட்டு விழாவில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் வெளிவந்த முதல் நாளே ஐடியுன்சில் (iTunes) முதலிடம் பிடித்தது[9].
# | பாடல் | பாடியவர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "எனை மறுபடி மறுபடி" | விஜய் பிரகாஷ், மேகா | 5.50 | |
2. | "ஊரெல்லாம் உன்னைக் கண்டு" | உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ | 4:56 | |
3. | "நீ சன்னோ நியு மூனோ" | ரிச்சர்ட், ஆண்ட்ரியா ஜெரெமையா, மில்லி நாயர் | 4.43 | |
4. | "நீராம்பல் பூவே" | அர்ஜுன் மேனன், மெக் விக்கி | 2.57 | |
5. | "டப்பாங்குத்து மெட்டுல" | கானா பாலா, உஜ்ஜயினி ராய் | 4.18 | |
6. | "தேனே தேனே செந்தேனே" | ஹரிசரன், பிரவீன் சாய்வி | 3.40 | |
மொத்த நீளம்: |
24.64 |
சந்தைப்படுத்துதல்
[தொகு]இத்திரைப்படத்தின் முதல் சுவரொட்டி 2014 ஆண்டு சனவரி மாதம் வெளிவந்தது. திரைப்படத்தின் முன்னோட்டம், 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது[10].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nicy V.P (6 January 2015). "Nannbenda Cast and release date announced". The International Business Times. Archived from the original on 14 June 2021. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
- ↑ "மீண்டும் 'நண்பேன்டா' சொல்லும் உதய் - நயன்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
- ↑ "காஜலை கைப்பற்றிய உதயநிதி India". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
- ↑ "சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால், கைவிட்டுப்போன படங்கள்!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
- ↑ "நண்பேன்டா படத்தால் பெரும் இழப்பு: முன்பணத்தை திருப்பி தரமுடியாது: காஜல் அகர்வால் உறுதி!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
- ↑ "40 லட்சம் விவகாரம்! காஜல்அகர்வால்-உதயநிதி மோதல்!!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
- ↑ "ஸ்ருதிஹாசனுக்கு தமன்னா கொடுத்த அதிர்ச்சி!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/nannnbenda-tracklist.html
- ↑ https://twitter.com/Udhaystalin/status/549272858795339776/photo/1
- ↑ "நண்பேன்டா டீசருக்கு பாராட்டு...உற்சாகத்தில் உதயநிதி!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.