பேரறிவாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரறிவாளன்
பிறப்புஅ. ஞா. பேரறிவாளன்
30 சூலை 1971 (1971-07-30) (அகவை 52)
ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம், தமிழ் நாடு
வேறு பெயர்(கள்)அறிவு
குற்றம்ராஜீவ் காந்தி கொலையில் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு மின்கலன்கள் வாங்கிக் கொடுத்ததற்காக.[1][2]
தீர்ப்பு(கள்)குற்றவியல் சதி (இ த ச 120-பி)
கொலை (இதச 320)[3]
தண்டனைமரண தண்டனை
தற்போதைய நிலைமரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
பெற்றோர்குயில்தாசன், அற்புதம்மாள்

பேரறிவாளன் (A. G. Perarivalan; பிறப்பு: 30 சூலை 1971) என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டையைச் சேர்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவர் சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் 1991 சூன் 11 அன்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தூக்குத்தண்டனை 2011 செப்டம்பர் 9 இல் நிறைவேற்றப்படவிருந்து,[4] பின்போடப்பட்டது. தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு தீர்ப்பு 2014 பிப்ரவரி 18 அன்று வழங்கப்பட்டது. பின்னர் 2022 மே 18 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.[5]

முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்டார்.[6]

நூல்கள்[தொகு]

கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் தனது வாழ்க்கையை விவரித்து "An Appeal From The Death Row (Rajiv Murder Case — The Truth Speaks)" என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் இதன் இந்தி மொழிபெயர்ப்பையும் 2011 ஆகத்து 23 அன்று இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ. பி. பரதன் தில்லியில் வெளியிட்டார்.[7]

தங்கப் பதக்கம்[தொகு]

பேரறிவாளன் சிறைச் சாலையில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயபடிப்பில் (Diploma) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.[8]

பிணையில் விடுவிக்கப்படல்[தொகு]

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனுக்கு 2022 மார்ச் 9 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. மாகாத்மா காந்தி கொலை வழக்கில் கோபால் கோட்சேவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கோட்சேவுக்கு நீதிமன்றம் விடுதலை செய்ததை சுட்டிக்காட்டிய பேரறிவாளனுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.[9]

விடுதலை[தொகு]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து 161வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் 2018 செப்டம்பர் 6 இல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின் படி, அப்போதைய எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுப்பதில் கால தாமதம் செய்தார். இக்காலதாமதத்தை சுட்டிக்காட்டி அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி. ஆர். கவாய், ஏ. எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு 2022 மே 18 அன்று தீர்ப்பு வழங்கியது.[10][11][12]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Gnani Sankaran: Should the state kill in the name of law? - Analysis - DNA". Dnaindia.com. 2011-08-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
 2. "State Of Tamil Nadu Through ... vs Nalini And 25 Others on 11 May, 1999". Indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-03.
 3. "The final verdict". Frontlineonnet.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
 4. ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை பரணிடப்பட்டது 2011-08-27 at the வந்தவழி இயந்திரம், தினகரன் (இந்தியா), ஆகத்து 26, 2011
 5. https://www.dinamalar.com/news_detail.asp?id=3032624
 6. http://nerudal.com/nerudal.60626.html
 7. Book by death row convict த இந்து செய்தி, பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 26, 2011
 8. "டிப்ளமோ படிப்பில் தங்க மெடல் வாங்கிய தூக்குக் கைதி பேரறிவாளன்!". ஒன் இந்தியா தமிழ். மார்ச் 15, 2013. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 9. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
 10. "பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு". பிபிசி தமிழ். 18 மே 2022. https://www.bbc.com/tamil/india-61489134. பார்த்த நாள்: 18 மே 2022. 
 11. "பேரறிவாளன் வழக்கு: `மாநில அரசின் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர்தான்!' - உச்ச நீதிமன்றம்". விகடன். 18 மே 2022. https://www.vikatan.com/government-and-politics/judiciary/supreme-court-slams-tn-governor-ravi-in-perarivalan-case. பார்த்த நாள்: 18 மே 2022. 
 12. "Rajiv Gandhi Assassination Convict Perarivalan To Walk Free After 31 Years". NDTV. 18 மே 2022. https://www.ndtv.com/india-news/rajiv-gandhi-assassination-case-supreme-court-orders-release-of-convict-ag-perarivalan-2985862. பார்த்த நாள்: 18 மே 2022. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரறிவாளன்&oldid=3515201" இலிருந்து மீள்விக்கப்பட்டது