எம்ஜிஆர் மகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்ஜிஆர் மகன்
இயக்கம்பொன்ராம்
தயாரிப்புசித்தார்த் ரவிபதி
செந்தில் குமார்
கதைபொன்ராம்
இசைஅந்தோணிதாசன்
நடிப்புசசிகுமார் (இயக்குநர்)
சத்யராஜ்
மிர்னாலினி ரவி
ஒளிப்பதிவுவினோத் ரத்னசாமி
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடுநவம்பர் 4, 2021 (2021-11-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எம்ஜிஆர் மகன் ( MGR Magan ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி குடும்ப அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும், இதை பொன்ராம் இயக்கியிருந்தார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. சசிகுமார், சத்யராஜ், மிர்னாலினி ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.[1][2] இது 4 நவம்பர் 2021 அன்று ஹாட் ஸ்டார் வழியே படம் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

படத்தின் முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி 25 செப்டம்பர் 2019 அன்று தொடங்கியது. படத்தின் ஆரம்ப கால படப்பிடிப்பு தேனியில் படமாக்கப்பட்டது.[3] சூப்பர் டீலக்ஸ் படத்தில் அறிமுகமான மிர்னாலினி ரவி இப்படத்தில் சசிகுமாருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் சத்யராஜின் வேடத்தில் நடிக்க ராஜ்கிரணுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவரது கால அட்டவணை முரண்பாடுகள் காரணமாக அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.[4] படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2019 இறுதியில் நிறைவடைந்தது [5]

ஒலிப்பதிவு[தொகு]

படத்துக்கு இசையமைப்பாளர் அந்தோணிதாசன் இசையமைத்திருந்தார். ஒலிப்பதிவு தொகுப்பில் யுகபாரதி, முருகன் மந்திரம், அந்தோணி தாசன் எழுதிய நான்கு பாடல்கள் இடம்பெற்றன. இசை உரிமையை சோனி மியூசிக் இந்தியா வாங்கியுள்ளது.[6]

வெளியீடு[தொகு]

எம்ஜிஆர் மகன் படம் 28 ஆகஸ்ட் 2020 அன்று இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவால் அனுமதிக்கப்பட்டது.[7] படம் முதலில் 2020 தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று காரணமாக திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.[8][9] படத்தின் முன்னோட்டம் 14 நவம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது. நவம்பர் 2020 இன் பிற்பகுதியில், படத்தை நத்தார் வெளியீட்டிற்குத் தள்ள குழு திட்டமிட்டது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.[10][11] பின்னர் திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் 23 ஏப்ரல் 2021 அன்று திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் வெளியிடப்படும் என்று அறிவித்தனர்.[12] ஆனால் கோவிட் 19இன் இந்தியாவில் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாடு அரசு விதித்த புதிய பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீட்டை மீண்டும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[13][14] இறுதியாக திரையரங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டு ஹாட் ஸ்டார் வழியே நேரடி-காணொளியாக 4 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.[15]

வரவேற்பு[தொகு]

பிலிம் கம்பேனியனின் விஷால் மேனன், "எம்.ஜி.ஆர் மகனில் உள்ள தந்தை-மகன் மோதல் விஷயங்களை வேடிக்கையாக மாற்றும் அளவுக்கு கடினமாக இல்லை அல்லது பதற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை" என எழுதினார்.[16]

சான்றுகள்[தொகு]

  1. "Sasi Kumar-Ponram's film titled 'MGR Magan'?". தி நியூஸ் மினிட். 18 September 2019. Archived from the original on 11 September 2021. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
  2. "Anthony Dasan turns music director for Sasikumar's 'MGR Magan'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 November 2019. Archived from the original on 21 November 2019. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  3. "Ponram's next with Sasikumar MGR Magan goes on floors". சினிமா எக்ஸ்பிரஸ். 25 September 2019. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  4. "Sasikumar's MGR Magan has Mirnalini as the heroine". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 September 2019. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  5. "Ponram's 'MGR Magan' shooting nears completion". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 November 2019. Archived from the original on 17 November 2020. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  6. "MGR Magan (Original Motion Picture Soundtrack) Songs: MGR Magan (Original Motion Picture Soundtrack)". Gaana.com. Archived from the original on 20 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
  7. "Sasikumar-Mirnalini Ravi's 'MGR Magan' censored with a clean 'U'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 August 2020. Archived from the original on 2 November 2021. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
  8. "Sasikumar's 'MGR Magan' to release this Diwali?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 October 2020. Archived from the original on 20 January 2021. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
  9. "Release of Sasikumar starrer 'MGR Magan' postponed". தி நியூஸ் மினிட். 20 April 2021. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
  10. "Sasikumar's 'MGR Magan' to release for Christmas holidays". சிஃபி. 23 November 2020. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  11. "கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியீட்டில் எம்ஜிஆர் மகன்". இந்து தமிழ் (நாளிதழ்). 21 November 2020. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  12. "Despite 50% occupancy, Sasikumar's 'MGR Magan' promises to deliver 100% entertainment". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 April 2021. Archived from the original on 2 November 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  13. "Sasikmar's MGR Magan gets postponed again due to new lockdown restrictions". டைம்ஸ் நௌவ். 19 April 2021. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  14. "MGR Magan: எம்.ஜி.ஆர் மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு". நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி. 19 April 2021. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  15. "Sasikumar's MGR Magan opts for OTT release". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 21 October 2021. Archived from the original on 26 October 2021. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.
  16. Menon, Vishal. "MGR Magan Review: An Ultra Generic Rural Drama With Zero Freshness". பார்க்கப்பட்ட நாள் November 10, 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்ஜிஆர்_மகன்&oldid=3709709" இலிருந்து மீள்விக்கப்பட்டது