விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்ரம்
இயக்குனர்இராஜசேகர்
தயாரிப்பாளர்கமல்ஹாசன்
கதைசுஜாதா
திரைக்கதைகமல்ஹாசன்,
சுஜாதா
இசையமைப்புஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்,
சத்யராஜ்,
அம்பிகா,
டிம்பிள் கபாடியா,
லிஸ்சி,
சாருஹாசன்
ஒளிப்பதிவுவி. ரங்கா,
எஸ்.எம்.அன்வர்
படத்தொகுப்புஆர்.விட்டல்,
சி.லான்சேி
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு29 மே 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விக்ரம் (Vikram) 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் ராஜசேகர் ஆவார்.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். குமுதம் வார இதழில் தொடர்கதையாக வந்து அதன் பின்னர் படமாக்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை ஆலோசனையின் போதும், திரைப்படத்தின் முன் தயாரிப்பின் போதும் இத்திரைப்படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தையே தன் முதல் தேர்வாக வைத்திருந்ததாக பல தருணங்களில் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில், திரையுலகில், மணிரத்னம் பெரிய பொருட்செலவில் தயாராகும் வணிகரீரியான படங்களில் பரிசோதிக்கப்படாத இயக்குநராக இருந்ததால் அது கைகூடவில்லை எனவும் தெரிவித்திருந்தார். தமிழ் திரைப்பட உலகில் 1 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் விக்ரமாகத் தான் இருந்தது.[1]

வரவேற்பு[தொகு]

கமல்ஹாசன் இத்திரைப்படத்தைப் பற்றி பின்னாளில் கூறும் போது அந்நாளைய ஊடகங்களால் விக்ரம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற வணிகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் என்றே கூறியுள்ளார். [2]

பாடல்கள்[தொகு]

இளையராஜா அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் வாலி மற்றும் வைரமுத்து ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 விக்ரம்.. விக்ரம் ... கமல்ஹாசன் வைரமுத்து 4:49
2 வனிதாமணி ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, கமல்ஹாசன் வைரமுத்து 4:54
3 சிப்பிக்குல் ஒரு முத்து ... கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி வைரமுத்து 4:42
4 என் ஜோடி மஞ்சகுருவி ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, சித்ரா வாலி 4:48
5 மீண்டும் மீண்டும் வா ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 5:06
வெளி ஒலியூடகங்கள்
யூடியூபில் ¬ விக்ரம் திரைப்படத்தின் பாடல் தொகுப்பு

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]