பிரம்மா (திரைப்படம்)
பிரம்மா | |
---|---|
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | எம். ராமநாதன் |
கதை | கே. சுபாஷ் சண்முக பிரியன் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் குஷ்பூ பானுப்ரியா |
ஒளிப்பதிவு | ஒய். என். முரளி |
படத்தொகுப்பு | கிருஷ்ணமூர்த்தி சிவா |
கலையகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | நவம்பர் 5, 1991[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பிரம்மா என்பது கே. சுபாஷ் இயக்கத்தில் 1991ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், குஷ்பூ, பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளியன்று வெளியான இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்று நூறு நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்படம் இதே பெயரில் மோகன் பாபு நடிப்பில் தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
நடிகர்கள்[தொகு]
- சத்யராஜ் - ரவிவர்மன்
- குஷ்பூ - ஜெனீபர்
- பானுப்ரியா - பவித்ரா
- கவுண்டமணி - வளையபாளையம் சின்னசாமி
- பிரதீப் சக்தி
தயாரிப்பு[தொகு]
தொடக்கத்தில் இப்படத்தின் ஜெனீபர் கதாபாத்திரத்தில் கனகா நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிக்க தேதி கிடைக்காததால் இப்பாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார்.
வெளியீடு[தொகு]
ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றது.