தம்பி (2019 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தம்பி
படிமம்:Thambi 2019 poster.jpg
பட வெளியீட்டின் சுவரொட்டி
இயக்கம்ஜீது ஜோசப்
தயாரிப்புவியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்
சுராஜ் சாதனா
திரைக்கதைஇரென்சில் டி'சில்வா
சமீர் அரோரா
ஜீது ஜோசப்
கே. மணிகண்டன்
இசைகோவிந்த் வசந்தா
நடிப்புகார்த்திக்
ஜோதிகா
சத்யராஜ்
நிகிலா விமல்
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புவி. எஸ். விநாயக்
கலையகம்வியாகாம்18 ஸ்டுடியோஸ்
பேரலல் மைண்ட் புரொடக்சன்ஸ்
விநியோகம்வியாகாம்18 ஸ்டுடியோஸ்
வெளியீடு20 திசம்பர் 2019 (2019-12-20)
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தம்பி ( Thambi ) என்பது ஜீது ஜோசப் இயக்கத்தில் 2019இல் தமிழ் மொழியில்-வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தின் கதையை இரென்சில் டிசில்வா, சமீர் அரோரா, ஜீது ஜோசப், கே.மணிகண்டன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இதை வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸும் பேரலல் மைண்ட் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்தன. கார்த்திக், ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஒரு இளைஞனைப் பின்தொடர்கிறது. அவன் ஒரு உள்ளூர் அரசியல்வாதியின் நீண்டகாலமாக காணாமல் போன மகன் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவனது அடையாளத்தை அரசியல்வாதியின் மகள் கேள்விக்குள்ளாகுகிறார். இப்படத்தில் நிகிலா விமல், அன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, சீதா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் .

இத்திரைப்படம் 20 திசம்பர் 2019 அன்று வெளியானது. நடிப்பு, அதிரடி காட்சிகள் கதை ஆகியவற்றுகாகப் பாராட்டப்பட்டது. [1] கலவையான வரவேற்பு இருந்தபோதிலும், படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பி_(2019_திரைப்படம்)&oldid=3205248" இருந்து மீள்விக்கப்பட்டது