சேனாதிபதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேனாதிபதி
இயக்கம்எம். ரத்தினக்குமார்
தயாரிப்புமலர் பாலு
கே. தண்டபாணி
கதைஎம். ரத்தினக்குமார்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்மலர் பிலிம்சு
விநியோகம்மலர் பிலிம்சு
வெளியீடுநவம்பர் 10, 1996 (1996-11-10)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சேனாதிபதி என்பது எம். ரத்தினக்குமார் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும் பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே படங்களுக்கு திரைக்கதையையும் எழுதியுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், சௌந்தர்யா மற்றும் சுகன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மலர் பாலு, கே. தண்டபாணி ஆகியோர் தயாரிப்பில் தேவாவின் இசையமைப்பில் நவம்பர் 10, 1996-ல் வெளியானது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of senathipathi". cinesouth.com. 2013-07-26 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Senathipathi (1996) Tamil Movie". spicyonion.com. 2013-07-26 அன்று பார்க்கப்பட்டது.