நாயக் (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயக்
இயக்கம்சங்கர்
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைசங்கர்
அனுராக் காஷ்யப் (வசனம்)
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅனில் கபூர்
ராணி முகர்ஜி
அம்ரிஷ் பூரி
பாரேஷ் ராவல்
ஜானி லிவர்
சௌரப் சுக்லா
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிறீ சூர்யா மூவிசு
வெளியீடுசெப்டம்பர் 7, 2001 (2001-09-07)
ஓட்டம்187 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிஇந்தி

நாயக் என்பது 2001ஆவது ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படமாகும். அனில் கபூர், ராணி முகர்ஜி, அம்ரிஷ் பூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3] இத்திரைப்படம், அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் 1999இல் தமிழில் வெளியான முதல்வன் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் தமிழில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் ஏற்கனவே இடம்பெற்ற பாடல்களாகும். அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை. மினிஸ்டர் என வங்காளத்தில் கசி கயாத் இயக்கத்தில் மன்னா, மௌசுமி நடிப்பில் உருவான இத்திரைப்படம் நாயக் திரைப்படத்துடன் இணைந்தே வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anil Kapoor's Nayak faces pre-release problems". Archived from the original on 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
  2. Anil Kapoor:The Nayak
  3. Mudhalvan,Nayak-tracklist-cast and crew
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயக்_(2001_திரைப்படம்)&oldid=3560510" இலிருந்து மீள்விக்கப்பட்டது